Home /News /entertainment /

தம்பியை சினிமாவில் அறிமுகப்படுத்தும் விஷ்ணு விஷால்!

தம்பியை சினிமாவில் அறிமுகப்படுத்தும் விஷ்ணு விஷால்!

ருத்ரா

ருத்ரா

விஷ்ணு விஷால் தனது சொந்த கம்பெனி தயாரிக்கும் படத்தில் தம்பி ருத்ராவை அறிமுகப்படுத்த உள்ளார். இதற்காக கதைகள் கேட்டு வருகிறார்.

அரசியல், சினிமா இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை, குடும்பத்தில் ஒருவர் அந்தத் துறையில் இருந்தாலும் மொத்த குடும்பத்தையும் அதில் இழுத்துவிடுவார்கள். பணம், புகழ், அதிகாரம் மூன்றும் சேர்ந்து கிடைக்கும் துறைகள் இவை.

இயக்குனர் விஷ்ணுவர்தன் மூலம் அவரது தம்பி கிருஷ்ணா நடிகரானார். மோகன் ராஜா தனது தம்பி ஜெயம் ரவியை இயக்கி இயக்குனரானார். லாரன்ஸ் தனது தம்பியை நாயகனாக்கி ஒரு படம் எடுக்கிறார். இவர்களுக்கெல்லாம் முன்பு செல்வராகவன் துள்ளுவதோ இளமையில் தனுஷை நடிகராக்கினார்.  தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பார்கள். சினிமாவில் அண்ணன் உடையான் எதற்கும் அஞ்சான். இவர்கள் வரிசையில் அடுத்து தம்பியை அறிமுகப்படுத்தப் போகிறவர் விஷ்ணு விஷால்.

விஷ்ணு விஷால் தனது சமூகவலைத்தளத்தில் இதனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். "2022 என்னுடைய படங்கள் காரணமாக மட்டும் முக்கியமில்லை. என்னுடைய தம்பி ருத்ராவை சினிமாவில் அறிமுகப்படுத்தப் போகிறேன்" என ருத்ராவின் புகைப்படத்தைப் பகிர்ந்து இதனை தெரிவித்துள்ளார்.  ருத்ரா பார்ப்பதற்கு ப்ளஸ் டூ படிக்கும் விஷ்ணு விஷால் போலிருக்கிறார். விஷ்ணு விஷால் தனது சொந்த கம்பெனி தயாரிக்கும் படத்தில் ருத்ராவை அறிமுகப்படுத்த உள்ளார். இதற்காக கதைகள் கேட்டு வருகிறார்.



இதையும் பாருங்க - மிஸ் பண்ணக் கூடாத தமன்னாவின் டக்கர் படங்கள்!

விஷ்ணு விஷால் நடிப்பில் எப்ஐஆர் திரைப்படம் வரும் பிப்ரவரியில் வெளியாகிறது. அதையடுத்து மோகன்தாஸ் படம் வெளியாக உள்ளது. இதனிடையில் தம்பி படத்தை தொடங்க நினைக்கிறார். நல்ல கதைகள் வைத்திருப்பவர்கள் விஷ்ணு விஷாலின் விவி ஸ்டுடியோஸை தொடர்பு கொள்ளலாம்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Vishnu vishal

அடுத்த செய்தி