எனது மகனை சந்திக்கக் காத்திருக்கிறேன் - விஷ்ணு விஷால் உருக்கம்

விஷ்ணு விஷால் | அவரது மகன் ஆர்யன்

நடிகர் விஷ்ணு விஷால் அவரது மனைவி ரஜினி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு விவாகரத்து பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

 • Share this:
  ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தனது மகனை சந்திக்க காத்திருப்பதாக நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

  கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் வரும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேவையில்லாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று மத்திய, மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன. எனவே மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

  இந்நிலையில் தனது மகன் ஆர்யனை சந்திக்க காத்திருக்கிறேன் என்று நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் மனிதத்துக்காக பிரார்த்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ள விஷ்ணு விஷால், தனது மகனின் புன்னகை பூத்த புகைப்படத்தை பதிவிட்டு, லாக் டவுன் நேரத்தில் இவன் இப்படித்தான் என்றும் கூறியுள்ளார்.

  ஊரடங்குக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் ஐடி பெயருடன் வீட்டில் பாதுகாப்பாக இருப்போம் என்றும் மாற்றியுள்ளார். நடிகர் விஷ்ணு விஷால் அவரது மனைவி ரஜினி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு விவாகரத்து பெற்றதும் குறிப்பிடத்தக்கது.  மேலும் படிக்க: கொரோனா - நடிகை காஜல் அகர்வால் ரூ.6 லட்சம் நிதியுதவியுடன் ‘பீட்டா’ அமைப்புக்கும் உதவி
  Published by:Sheik Hanifah
  First published: