கோவிட் 2-ம் அலை பல உயிர்களை பறிக்கிறது - சிந்துஜா, நிதீஷ் வீரா மறைவுக்கு நடிகர் விஷ்ணு விஷால் இரங்கல்

விஷ்ணு விஷால்

”உங்கள் அன்புக்குரியவர்கள் மற்றும் உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்”

  • Share this:
    இந்த கொரோனா இரண்டாம் அலை பல உயிர்களை பறித்து வருகிறது கவனமாக இருங்கள், என நடிகர் விஷ்ணு விஷால் ட்வீட் செய்துள்ளார்.

    கொரோனா தொற்றுக்கு நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் அருண்ராஜா காமாராஜ் தனது மனைவி சிந்துஜாவை இழந்துள்ளார். இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அருண்ராஜா.

    இது தவிர, புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் நிதிஷ் வீராவும் இன்று கொரோனா தொற்றுக்கு பலியாகியிருக்கிறார்.



    இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் நடிகர் விஷ்ணு விஷால், ”இதை எழுத வேதனையாக இருக்கிறது...
    இளைப்பாறுங்கள் நித்தீஷ் வீரா. அவருடன் வெண்ணிலா கபாடி குழு, மற்றும் மாவீரன் கிட்டு ஆகியவற்றில் நடித்துள்ளேன். இந்த கோவிட் இரண்டாவது அலை பல உயிர்களை பறிக்கிறது ..
    கவனமாக இருங்கள், உங்கள் அன்புக்குரியவர்கள் மற்றும் உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.



    ”இளைப்பாறுங்கள் சிந்து... ஆழ்ந்த இரங்கல் அருண்ராஜா காமராஜ். இந்த தாங்க முடியாத இழப்பை சமாளிக்க கடவுள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பலம் அளிப்பார்” என இன்னொரு ட்வீட்டிலும் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: