• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வலிமை படத்துடன் மோதலை தவிர்த்த விஷாலின் வீரமே வாகை சூடும்

வலிமை படத்துடன் மோதலை தவிர்த்த விஷாலின் வீரமே வாகை சூடும்

வீரமே வாகை சூடும்

வீரமே வாகை சூடும்

விஷால் நடிப்பில் வீரமே வாகை சூடும், லத்தி படங்கள் தயாராகி வருகின்றன. இதில் முதல் படத்தை விஷாலும், இரண்டாவது படத்தை அவரது நண்பர்கள் நந்தா, ரமணா இணைந்தும் தயாரிக்கின்றனர். இதில் முதலில் வீரமே வாகை சூடும் வெளியாகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
2022 ஜனவரி பொங்கலை முன்னிட்டு வலிமை வெளியாகிறது. இந்தப் படத்துடன் விஷாலின் வீரமே வாகை சூடும் மோதும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வலிமைக்கு வழிவிட்டு தள்ளிப் போயுள்ளது விஷால் படம்.

தீபாவளி, பொங்கலுக்கு அரை டஜன் படங்களுக்கு மேல் வெளியான காலம் மலையேறிவிட்டது. ஒரு படத்தை ஒரே நேரத்தில் அதிக திரையரங்குகளில் வெளியிட ஆரம்பித்த பின், முன்னணி நடிகர் ஒருவரது படம் வெளிவந்தாலே மழைக்கால சென்னை ட்ரெயினேஜைப் போல் படங்கள் ஜாமாகிவிடுகின்றன. தீபாவளிக்கு வலிமை, அண்ணாத்தயுடன் வெளியாகும் என எதிர்பார்த்தனர். ஆனால், தயாரிப்பாளர் போனி கபூர் படம் பொங்கலுக்குதான் என்றார். அந்த இடைவெளியில் எனிமி போய் ஒட்டிக்  கொண்டது. விஷால், ஆர்யா நடித்த இந்தப் படத்தால் தயாரிப்பாளருக்கு பல கோடிகள் நஷ்டமாம். அண்ணாத்தயுடன் போட்டியிடாமல் இருந்திருந்தாலும் எனிமி தேறியிருக்குமா என்பது சந்தேகமே.

விஷால் நடிப்பில் வீரமே வாகை சூடும், லத்தி படங்கள் தயாராகி வருகின்றன. இதில் முதல் படத்தை விஷாலும், இரண்டாவது படத்தை அவரது நண்பர்கள் நந்தா, ரமணா இணைந்தும் தயாரிக்கின்றனர். இதில் முதலில் வீரமே வாகை சூடும் வெளியாகிறது. தீபாவளிக்கு எனிமி வெளியானது போல் பொங்கலுக்கு வீரமே வாகை சூடும் வெளியாகும் என எதிர்பார்த்தனர்.

Also read... கிறிஸ்துமஸை முன்னிட்டு தமிழில் வெளியாகும் The Matrix Resurrections...!

சொந்தப் படம் என்பதால் விஷால் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. ஜனவரி 26 க்கு வீரமே வாகை சூடும் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளார். அதேநேரம், இது நல்ல முடிவா என்று உறுதியாக சொல்ல முடியாது. படம் வெளியான ஒரே வாரத்தில் நவம்பர் 4 சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பு. மொத்த திரையரங்கையும் ஆக்கிரமித்துவிடுவார்கள். 2022 ஜனவரி 26 வெளியீட்டு தேதியை விஷால் மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: