Home /News /entertainment /

‘நடிகர் சங்க கட்டிடத்தில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி பெயர் இடம்பெற வேண்டும்’ - விஷால் விருப்பம்

‘நடிகர் சங்க கட்டிடத்தில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி பெயர் இடம்பெற வேண்டும்’ - விஷால் விருப்பம்

நடிகர் விஷால்

நடிகர் விஷால்

Laththi Teaser : நேற்று வெளியான லத்தி படத்தின் டீசர், அதிக விருப்பங்களை பெற்று வருகிறது. குறிப்பாக டீசரின் பின்னணி இசைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    நடிகர் சங்க கட்டிடத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், உதயநிதியின் பெயர்கள் இடம்பெற வேண்டும் என்று நடிகர் விஷால் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    விஷால் நடிப்பில், வினோத் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள லத்தி படத்தின் டீசர் வெளியீட்டு விழா பிரசாத் ஸ்டூடியோவில் நேற்று நடைபெற்றது. ஆக்சன் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் மிகப் பெரும் வரவேற்பைப் பெறும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று வெளியான லத்தி படத்தின் டீசர், அதிக விருப்பங்களை பெற்று வருகிறது. குறிப்பாக டீசரின் பின்னணி இசைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷாலுக்கு ஜோடியாக சுனைனா படத்தில் இடம் பெற்றிருக்கிறார்.

    இணையத்தில் வைரலாகும் நடிகை பூஜா ஹெக்டேவின் ஹாலிடே போட்டோஸ்!

    தமிழ் டீசரை உதயநிதி ஸ்டாலின், தெலுங்கு டீசரை எஸ்.ஜே.சூர்யா, கன்னட டீசரை நாசர் ஆகியோர் வெளியிட்டனர்.



    டீசர் வெளியீட்டு விழாவில். பல்வேறு திரைப்பட பிரபலங்கள், மூத்த தயாரிப்பாளர்கள், திரைக்கலைஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் விஷால் பேசும்போது, லத்தி படம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான போலீஸ் கான்ஸ்டபிள்களின் உழைப்பு, தியாகம் வீரத்தை பேசும்.

    உதயநிதி ஸ்டாலினும் நானும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஒன்றாக படித்தோம். என்னைப் பற்றிய ரகசியங்கள் அவருக்கும், அவரைப் பற்றிய ரகசியங்கள் எனக்கும் தெரியும். உதயநிதி அரசியலுக்கு வர வேண்டும் என்று வற்புறுத்தியவர்களில் நானும் ஒருவன். விரைவில் நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படும்.

    நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள முதல் இந்தி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

    வரலாற்று சிறப்புமிக்க நடிகர் சங்க கட்டிடத்தில், முதல்வர் ஸ்டாலின் பெயரும், உதயநிதி ஸ்டாலின் பெயரும் இடம் பெற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அது விரைவில் நடக்கும் இவ்வாறு அவர் தெரிவித்தார்
    Published by:Musthak
    First published:

    Tags: Actor vishal

    அடுத்த செய்தி