ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்கும் விஷால்

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்கும் விஷால்

விஷால் - ஜெகன் மோகன் ரெட்டி

விஷால் - ஜெகன் மோகன் ரெட்டி

2024 சட்டமன்றத் தேர்தலில் குப்பத்தில் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து போட்டியிடப் போவதில்லை என்று விஷால் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வரும் 27-ம் தேதி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்திக்கிறார் விஷால்.

நடிகர் விஷால் நடித்துள்ள 'லத்தி' படம் நாளை வெளியாவதையடுத்து, தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் விளம்பரப்படுத்தும் வேலைகளில் அவர் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அவர் கான்ஸ்டபிளாக நடித்துள்ள இப்படம் நாளை திரைக்கு வருகிறது.

இதற்கிடையே விஷால், வரும் டிசம்பர் 27-ம் தேதி விஜயவாடாவில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பு அரசியல் பின்னணியைக் கொண்டிருக்கலாம் என யூகங்கள் எழுந்துள்ளன. விஷால், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் ஆதரவாளர் என்பதும், 2019ல் அவர் YCP வெற்றியை ஆதரித்ததும் அனைவரும் அறிந்ததே.

2024 சட்டமன்றத் தேர்தலில் குப்பத்தில் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து போட்டியிடப் போவதில்லை என்று விஷால் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். விஷாலுக்கும் அவரது தந்தைக்கும் குப்பத்தில் பிஸினெஸ் இருப்பதால், அவருக்கு அங்குள்ள அனைத்துமே அத்துப்படி.

150 கோடி சம்பளம்... விஜய்யின் தளபதி 68 படத்தின் ஹாட் அப்டேட்!

'லத்தி' திரைப்படம் விஷால் இதுவரை நடித்த ஆக்‌ஷன் படங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. படத்தில் 45 நிமிட காட்சி, ஒரு கட்டிடத்தில் படமாக்கப்பட்டது. அந்த ஷெட்யூலை முடிக்க 90 நாட்கள் ஆகியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor vishal, Tamil Cinema