Home /News /entertainment /

கேங்ஸ்டராக விஷால் நடிக்கும் மார்க் ஆன்டனி படத்தின் அப்டேட்…

கேங்ஸ்டராக விஷால் நடிக்கும் மார்க் ஆன்டனி படத்தின் அப்டேட்…

விஷால்

விஷால்

Vishal movie : மார்க் ஆன்டனி படத்தில் விஷாலுக்கு வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார். பெரும்பாலான காட்சிகள் சென்னையில் படமாக்கப்படவுள்ளன.

    கேங்ஸ்டர் கேரக்டரில் விஷால் நடித்து வரும் மார்க் ஆண்டனி படத்தின் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

    விஷால் தற்போது லத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் போலிஸ் கேரக்டரில் நடிக்கிறார் விஷால். இதன் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் ஷூட்டிங் படங்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

    இதற்கு முன்னதாக ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மார்க் ஆன்டனி என்ற படத்தில் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது.

    இதையும் படிங்க - பாலாவின் ஆரம்பகால திரைப்படங்கள் ஒரு விமர்சனப் பார்வை

    மே மாதம் முதல் வாரம் பரபரப்பாக தொடங்கிய படப்பிடிப்பு அதிக வேகத்தில் நடைபெற்றது. இடையே லத்தி படத்தின் ஷூட்டிங்கிற்காக சிறிது காலம் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் மீண்டும் மார்க் ஆன்டனி படத்தின் ஷூட்டிங் இம்மாதம் 18-ம்தேதி தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஷா படத்தில் வில்லனாக மார்க் ஆன்டனி என்ற கேரக்டரில் ரகுவரன் நடித்திருப்பார். அன்றிலிருந்து இந்தப் பெயர் சினிமா ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட டைட்டிலாக உள்ளது.

    இதையும் படிங்க - உலகளவில் No.1 இடத்தை பிடித்த பீஸ்ட் பட பாடல்!

    மார்க் ஆன்டனி படத்தில் விஷாலுக்கு வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார். பெரும்பாலான காட்சிகள் சென்னையில் படமாக்கப்படவுள்ளன. ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரிது வர்மா நடிக்கிறார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor vishal

    அடுத்த செய்தி