நானும், 82 வயது எனது தந்தையும் கொரோனாவிலிருந்து மீண்டது இந்த மாத்திரையால்தான் - அனுபவம் பகிரும் விஷால் வீடியோ

ஆயுர்வேத சிகிச்சையின் மூலம் தானும், தந்தையும் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நானும், 82 வயது எனது தந்தையும் கொரோனாவிலிருந்து மீண்டது இந்த மாத்திரையால்தான் - அனுபவம் பகிரும் விஷால் வீடியோ
நடிகர் விஷால்
  • Share this:
நடிகர் விஷால் மற்றும் அவரது தந்தை, அவரின் மேலாளர் ஆகியோருக்கு கடந்த 20 தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் அவர், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டார். கொரோனா அனுபவம் குறித்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘எனது அப்பா ஜி.கே.ரெட்டிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

நான், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. அவரை வீட்டில் வைத்து சிகிச்சை அளித்தோம். அவருக்கு உதவி செய்ததால், எனக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து என்னுடைய மேலாளர் ஹரிக்கும் கொரோனா பாதித்தது. நாங்கள், ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவம் எடுத்து ஒரு வாரத்தில் நாங்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்தோம்.

நான், ஆயுர்வேதிக் மருத்துவத்துக்கு விளம்பரம் செய்வதற்காக இதனை சொல்லவில்லை. உண்மையிலேயே அது பலனளித்தது. கொரோனா வந்தாலும் பயப்படக் கூடாது. எங்க அப்பாவுக்கு 82 வயது. அவர் பயப்படாமல் இருந்தார். அந்த மாத்திரைதான் என்னையும் அவரையும் இருந்ததுதான் அவரை கொரோனாவிலிருந்து மீட்டது’ என்று தெரிவித்தார்.
First published: July 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading