Home /News /entertainment /

மீண்டும் குஸ்தியில் இறங்கிய விஷால், மிஷ்கின்...!

மீண்டும் குஸ்தியில் இறங்கிய விஷால், மிஷ்கின்...!

விஷால் மற்றும் மிஷ்கின்

விஷால் மற்றும் மிஷ்கின்

துப்பறிவாளன் 2 படத்தின் கதையை விஷாலுக்கு தந்துவிட்டதாக மிஷ்கின் கூறியுள்ளார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
துப்பறிவாளன் 2 படம் குறித்தும், மிஷ்னினுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது பற்றியும் சில தினங்கள் முன்பு பேட்டியென்றில் விஷால் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து விஷாலை விமர்சித்துள்ளார் இயக்குனர் மிஷ்கின்.

துப்பறிவாளன் 2 படத்தை ஆரம்பிக்கும் போது அனைத்தும் நல்லபடியாகத்தான் இருந்தது. லண்டனில் படப்பிடிப்பை ஆரம்பித்தனர். விஷால் நாயகனாக நடித்ததுடன் படத்தையும் தயாரித்தார். ஆனால், சில தினங்களில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படம் நின்றது. மிஷ்கின் படத்திலிருந்து வெளியேறினார். சினிமா நிகழ்ச்சி ஒன்றில் விஷாலை பொறுக்கி என்று கடுமையாக விமர்சித்தார் மிஷ்கின். தனது தம்பியை விஷால் மோசமாக பேசியதாக தெரிவித்தார்

ஆத்திரம் வடிந்த பிறகு, விஷால் என் தம்பி மாதிரி என்று இறங்கி வந்தார் மிஷ்கின். இன்னும் பல விஷயங்களை விஷாலை பெருமைப்படுத்தும்விதமாக பேசினார். ஆனால், விஷால் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் சில தினங்கள் முன்பு விஷாலிடம் துப்பறிவாளன் 2 குறித்து கேட்டகப்பட்டது. மிஷ்கினை லண்டன் அழைத்துச் சென்றதுதான் நான் செய்த தவறு. இங்கேயே அந்தப் படத்தை எடுத்திருக்க வேண்டும், மிஷ்கினுடன் இனி இணைய வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து பல மாதங்களாக கோமாவில் இருந்த பிரச்சனை மீண்டும் விழித்துக் கொண்டது.

விஷாலின் பேட்டி காமெடியாக இருந்தது என்று மிஷ்கின் பதிலடி கொடுத்துள்ளார். தனது உதவியாளர்களை மோசமாக நடத்தியதால்தான் படத்திலிருந்து விலகினேன் என்று உதவியாளர்களின் பாதுகாவலனாக ஒரு விளக்கத்தை மிஷ்கின் அளித்துள்ளார்.

Also read... Annaatthe twitter review: எப்படி இருக்கிறது ரஜினியின் அண்ணாத்த?  ட்விட்டர் விமர்சனம்!

அதற்கு வலுகூட்டுவது போல், மிஷ்கினின் மேலாளர் ஸ்ரீகாந்தும் விஷாலை குற்றம்சாட்டியுள்ளார். துப்பறிவாளன் 2 படப்பிடிப்பில் விஷாலின் நண்பரும், நடிகருமான ரமணாவின் தலையீடு அதிகமாக இருந்ததாகவும், தான் உள்பட உதவியாளர்கள் அனைவரையும் ரமணா அடிக்க வந்ததாகவும், ஒருகட்டத்துக்கு மேல் அவரது தொல்லை தாங்காமல் விலகியதாகவும் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

துப்பறிவாளன் 2 படத்தின் கதையை விஷாலுக்கு தந்துவிட்டதாக மிஷ்கின் கூறியுள்ளார். 2022 ஜனவரியில் படத்தை விஷாலே இயக்குகிறார். எழுத்து, இயக்கம் என்று விஷாலின் பெயரே இப்போது துப்பறிவாளன் 2 படத்தில் இடம்பெறுகிறது. மிஷ்கின் செல்வது போல் கதை அவருடையது என்றால், விஷால் எழுத்து என்று எப்படி அவர் பெயரை போட்டுக் கொண்டார்துப்பறிய வேண்டிய விஷயம்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor vishal, Mysskin

அடுத்த செய்தி