Home /News /entertainment /

ஆம்... நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் - விஷால்

ஆம்... நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் - விஷால்

விஷால்

விஷால்

2019-ஆம் ஆண்டில், விஷால் ஆந்திராவைச் சேர்ந்த நடிகை அனிஷா அல்லா ரெட்டியை காதலித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

    நடிகர் விஷால் தான் காதலிக்கும் பெண் யாரென்று விரைவில் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

    தமிழ் சினிமாவின் விறுவிறுப்பான ஆக்‌ஷன் ஹீரோ விஷால் தனது படத்தின் சண்டைக் காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுத்து நடிப்பதில் பெயர் பெற்றவர். இந்த வருடத்தில் மட்டும், கடந்த வாரம் 'லத்தி' படப்பிடிப்பில் காயமடைந்ததோடு சேர்த்து, மூன்று முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    நடிகர் சங்க பொதுச்செயலாளர் என்ற முறையில், நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பிறகே தான் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்திருந்தார் விஷால். நிதி சிக்கல்கள், நீதிமன்ற வழக்குகள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக அதன் கட்டுமானப் பணிகள் தடைபட்டுள்ளன.

    விஜய் மனைவி சங்கீதா விஜய்யின் தங்கையைப் பார்த்திருக்கிறீர்களா? ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்காங்களே!

    2019-ஆம் ஆண்டில், விஷால் ஆந்திராவைச் சேர்ந்த நடிகை அனிஷா அல்லா ரெட்டியை காதலித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர்கள் சில தனிப்பட்ட காரணங்களால் உறவை முறித்துக் கொண்டனர். முன்னதாக, நடிகை வரலட்சுமி சரத்குமாருடன் விஷால் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    விஜய்யின் வாரிசு முதல் பாடல் குறித்த சூப்பர் அப்டேட்!

    இந்நிலையில் விஷால் தனது சமீபத்திய பேட்டியில், நிச்சயிக்கப்பட்ட திருமணம் தனக்கு ஒத்து வரும் என நம்பவில்லை என்று கூறியுள்ளார். மேலும், தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அந்த பெண் யாரென விரைவில் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

    படங்களைப் பொறுத்தவரை, சுனைனா ஹீரோயினாக நடிக்கும் 'லத்தி' படத்தைத் தவிர, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' மற்றும் தான் இயக்குனராக அறிமுகமாகும் 'துப்பறிவாளன் 2' ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் விஷால்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor vishal

    அடுத்த செய்தி