தீபாவளிக்கு நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாகும் விஷாலின் ‘சக்ரா’

‘சக்ரா’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதை நடிகர் விஷால் உறுதி செய்துள்ளார்.

தீபாவளிக்கு நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாகும் விஷாலின் ‘சக்ரா’
நடிகர் விஷால்
  • News18 Tamil
  • Last Updated: September 16, 2020, 8:01 PM IST
  • Share this:
இயக்குநர் எழிலிடம் உதவியாளராக பணியாற்றிய ஆனந்தன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘சக்ரா’. விஷால் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார்.

இவர்களுடன் ரோபோ சங்கர், ரெஜினா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இத்திரைப்படத்தை தயாரித்துள்ள இத்திரைப்படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஆன்லைன் முறைகேட்டை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் தனது தந்தையின் அசோகச் சக்கர பதக்கத்தை தேடிக் கண்டுபிடிக்கும் ராணுவ அதிகாரியாக விஷால் நடிக்கிறார். கடந்த ஜூன் 27-ம் தேதி ‘சக்ரா’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு மீதமிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.


இந்நிலையில் தீபாவளிக்கு ஓடிடி தளத்தில் ‘சக்ரா’ திரைப்படம் வெளியாகும் என்று விஷால் பாலிவுட் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது, “இன்னும் சில நாட்கள் தான் படப்பிடிப்பு மீதமிருக்கிறது. இந்த தீபாவளிக்கு ‘சக்ரா’ கண்டிப்பாக வெளியாகும். ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என்று விஷால் தெரிவித்துள்ளார்.‘சக்ரா’ திரைப்படம் எந்த ஓடிடி தளத்தில் ரிலீசாகிறது என்பதை விரைவில் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
First published: September 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading