சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ’ஆக்‌ஷன்’! - புதிய போஸ்டர் ரிலீஸ்

news18
Updated: August 15, 2019, 12:01 PM IST
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ’ஆக்‌ஷன்’! - புதிய போஸ்டர் ரிலீஸ்
விஷால் நடிக்கும் ஆக்‌ஷன்
news18
Updated: August 15, 2019, 12:01 PM IST
விஷால் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ஆக்‌ஷன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ஆம்பள படத்தை அடுத்து மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வருகிறார் விஷால். அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். வேதாளம், காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்த கபீர் துஹான் சிங் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். ஹிப்ஹாப் தமிழா இசையில் உருவாகும் இந்தப் படத்தை டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன் இந்தப் படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட அழகான லொகேஷன்களில் படமாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்தப் படத்துக்கு ஆக்‌ஷன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை போஸ்டருன் வெளியிட்டுள்ளது படக்குழு.




Loading...



அயோக்யா படத்துக்கு பிறகு விஷால் நடிப்பில் ஆக்‌ஷன் படம் வெளியாக உள்ளது. ஆம்பள, மதகஜ ராஜா ஆகிய படங்களுக்குப் பிறகு சுந்தர்.சி - விஷால் கூட்டணியின் மூன்றாவது படமாக ஆக்‌ஷன் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ பார்க்க: சிம்பு கூட்டும் மகா மாநாடு வெற்றி பெறுமா?

First published: August 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...