Home /News /entertainment /

விஷால் - எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் 'மார்க் ஆன்டனி' படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!!

விஷால் - எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் 'மார்க் ஆன்டனி' படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!!

ஆதிக் ரவிச்சந்திரன் - எஸ்.ஜே, சூர்யா - விஷால்

ஆதிக் ரவிச்சந்திரன் - எஸ்.ஜே, சூர்யா - விஷால்

தற்போது விஷால் லத்தி, துப்பபறிவாளன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் துப்பறிவாளன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகம் உள்ளது

விஷால் ஹீரோவாகவும், எஸ்.ஜே. சூர்யா வில்லனாகவும் நடிக்கும் மார்க் ஆன்டனி படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்த ரித்து வர்மா நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு சக்ரா மற்றும் எனிமி ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தன. இதில் எனிமி மட்டுமே ஓரளவு வரவேற்பை பெற்றது. அதற்கு முன்பு வெளிவந்த சண்டைக் கோழி 2, அயோக்யா படங்கள் தோல்வியடைந்தன.

2018-ல் வெளியான இரும்புத் திரை படத்திற்கு பின்னர் சொல்லிக்கொள்ளும்படியாக விஷாலுக்கு எந்தப் படமும் அமையவில்லை. இந்தாண்டு வெளியான வீரமே வாகை சூடும் படமும் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

இதையும் படிங்க - ஜெய்பீம் இயக்குனர் ஞானவேலுடன் மீண்டும் இணையும் சூர்யா... 

தற்போது விஷால் லத்தி, துப்பபறிவாளன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் துப்பறிவாளன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகம் உள்ளது. இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மார்க் ஆன்டனி என்ற படத்தில் நடிக்கிறார். எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க - Happy Birthday Trisha : அடி அழகா சிரிச்ச முகமே! நடிகை த்ரிஷாவின் க்யூட் போட்டோஸ்

2015-ல் திரிஷா இல்லைனா நயன்தாரா படத்திற்கு பின்னர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. சிம்புவை வைத்து அவர் இயக்கிய அன்பானவன், அசராதவன், அடங்காதவன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி படு தோல்வியை சந்தித்தது.

இதையும் படிங்க - வசூலில் அமீர் கானின் தங்கல் சாதனையை முறியடித்தது கே.ஜி.எஃப். 2... பாகுபலி 2 வசூலை முந்துமா?

இவ்வாறு விஷாலும், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் கட்டாயம் ஹிட் கொடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.
Published by:Musthak
First published:

Tags: Actor vishal

அடுத்த செய்தி