• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நடிகை சரோஜா தேவியை நேரில் சென்று சந்தித்த விஷால்..

நடிகை சரோஜா தேவியை நேரில் சென்று சந்தித்த விஷால்..

சரோஜா தேவி - விஷால்

சரோஜா தேவி - விஷால்

Actor vishal met actress saroja devi : நடிகை சரோஜா தேவியை, அவரின் வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார் விஷால்.

  • Share this:
    நடிகர் விஷால் தெலுங்குன் குடும்பத்தில் பிறந்தவராக இருந்தாலும் இவருக்கு தமிழ் சினிமாவிலே ரசிகர்கள் அதிகம் என்று கூறலாம். விஷால் 'செல்லமே' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார். விஷால், ஆர்யா நடிப்பில் தீபாவளியன்று எனிமி திரைப்படம் வெளியானது.இதற்கு முன்பு விஷால் நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் , அயோக்யா, சக்ரா ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிப்பெறவில்லை.



    எனவே எனிமி திரைப்படம் வெற்றிப் பெற வேண்டும் என்பதற்காக நடிகர் விஷால் தீபாவளிக்கு முன்னதாக திருப்பதி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.அதோடு திருப்பதியில் நடிகை ரோஜா அவர்களையும் சந்தித்தார்.அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

    also read : நான் பேசுறது கேக்குதா’.. கனெக்ட் படத்தின் சவுண்ட் ஸ்டோரியை வெளியிட்ட படக்குழு..

    சினிமா மட்டுமில்லாமல் சமூக சேவையிலும் விஷாலுக்கு ஆர்வம் உள்ளது.சில நாட்களுக்கு முன்பு கன்னட சூப்பர் ஸ்டாட் புனித் ராஜ்குமார் மாராடைப்பால் காலமானார்.அப்போது புனித் ராஜ்குமார் படிக்க வைத்த குழந்தைகளின் படிப்பு செலவை தான் ஏற்பதாக விஷால் அறிவித்தார்.

    இந்நிலையில் நடிகர் விஷால் புகழ்பெற்ற நடிகையான சரோஜா தேவியை, அவரின் வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார்.அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: