MK Stalin - Vishal: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விஷால் நேரில் வாழ்த்து!

முதல்வருடன் விஷால்

கவனமாக இருக்கவும் என்னை அறிவுறுத்தினார்.

  • Share this:
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் விஷால்.

    நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களை வென்றது. அதோடு 125 இடங்களை வென்ற திமுக பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு பிரபலங்களும், பொது மக்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால், "முதல்வரை சந்தித்து வாழ்த்து சொன்னேன். அத்துடன் நடிகர் சங்கத்தின் இன்றைய நிலைமையையும் எடுத்து கூறினேன். இதனால் எத்தனை கலைஞர்கள் பென்ஷன் கிடைக்காமல், மருந்து வாங்க கூட முடியாமல் கஷ்டபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பற்றியும் விளக்கினேன்.

    இன்றைய சூழலில் கொரோனாவில் இருந்து முதலில் நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான அனைத்து கட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு, கண்டிப்பாக அதற்கான ஆவணத்தை செய்து தருகிறேன் என்று உறுதி அளித்தார். அத்துடன் கவனமாக இருக்கவும் என்னை அறிவுறுத்தினார். அத்தோடு முதன் முதலாக போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரான திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் சந்தித்து வாழ்த்துக் கூறினேன்” என்றார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: