முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஆகஸ்ட் 12-ல் விஷாலின் லத்தியுடன் மோதும் கார்த்தியின் விருமன்…

ஆகஸ்ட் 12-ல் விஷாலின் லத்தியுடன் மோதும் கார்த்தியின் விருமன்…

விஷால் - கார்த்தி

விஷால் - கார்த்தி

Laththi Viruman : இந்த இரு படங்களும் ரசிகர்களின் வரவேற்பை பெறும் என்று சினிமா வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

  • Last Updated :

விஷால் நடித்துள்ள லத்தி மற்றும் கார்த்தி நடித்துள்ள விருமன் ஆகிய படங்கள் ஒரே தேதியில் வெளியாக உள்ளன. இதனால் விஷால், கார்த்தி படங்கள் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

விஷால், சுனைனா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள லத்தி திரைப்படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் காவலர் வேடத்தில் விஷால் நடித்து இருக்கிறார்.

ஆக்சன் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான லத்தி திரைப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது. இதற்கிடையே ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்த கார்த்தியின் விருமன் திரைப்படம், முன்கூட்டியே ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கார்த்தி, இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். முத்தையா விருமன் படத்தை இயக்கி உள்ளார்.

ஏற்கனவே முத்தையா -  கார்த்தி காம்போவில் கொம்பன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. விருமன் படத்திற்கும் யுவன் சங்கர் ராஜாதான் இசையமைத்திருக்கிறார்.

ஆக்சன், குடும்ப கதை ஜானரில் விருமன் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. லத்தி மற்றும் விருமன் ஆகிய படங்கள் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருப்பதால் கார்த்தி - விஷால் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

top videos

    இந்த இரு படங்களும் ரசிகர்களின் வரவேற்பை பெறும் என்று சினிமா வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

    First published:

    Tags: Actor Karthi, Actor vishal