ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நடிகர் விஷால் வீடு மீது தாக்குதல்.. சிக்கிய 4 பேர் பகீர் வாக்குமூலம்

நடிகர் விஷால் வீடு மீது தாக்குதல்.. சிக்கிய 4 பேர் பகீர் வாக்குமூலம்

விஷால்

விஷால்

நடிகர் விஷால் வீட்டில் கல்லெறிந்த விவகாரத்தில் 4 பேர் சிக்கியுள்ள நிலையில் விசாரணையில் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  நடிகர் சங்க பொது செயலாளராக உள்ள நடிகர் விஷால் அண்ணா நகர் 12ஆவது தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 26ம் தேதி காரில் வந்த அடையாளம் தெரியாத சிலர் அவரது வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றனர் இதனால் வீட்டின் முதல் மாடியிலிருந்த ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. உடனே வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் விஷால் வீட்டில் கற்களை எரிந்துவிட்டு தப்பி செல்வது போல் பதிவாகி இருந்தது.

  இச்சம்பவம் குறித்து விஷாலின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் அண்ணா நகர் காவல் நிலையத்தில் சிசிடிவி ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார். விஷால் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றிருந்த போது இந்த கல்வீச்சு சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து கண்ணாடியை உடைத்த நபர்களை போலீசார் தேடி வந்தனர்.

  Also Read : கபுல்ஸ் கோல்... மாறி மாறி போட்டோ க்ளிக்... டெல்லியில் ரசிக்க வைத்த சூர்யா - ஜோதிகா!

  இந்த நிலையில் இன்று காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் நான்கு நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் மீன் ஏற்றுமதி தொழில் செய்யும் கொளத்தூரை சேர்ந்த ப்ரவீன் குமார், ராஜேஷ் மற்றும் ஹோட்டல் நடத்தி வரும் அண்ணா நகரை சேர்ந்த சபரீஸ்வரன், புதுகோட்டை மாவட்டத்தை சேர்ந்த சிவில் என்ஜினியர் மணிரத்னம் என்பது தெரியவந்தது. நண்பர்களான இவர்கள் சம்பவத்தன்று ஒன்றாக சென்று மது அருந்திவிட்டு, போதையில் காரில் வந்து கொண்டிருந்தனர்.

  அப்போது நண்பர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் தகராறாக முற்றியுள்ளது. விஷால் வீட்டருகே காரில் வந்து கொண்டிருந்தபோது, தகராறு முற்றி ஒருவரையொருவர் மாறிமாறி கற்களால் வீசி தாக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் தான், தெரியாமல் ஒரு கல் நடிகர் விஷால் வீட்டின் ஜன்னல் கண்ணாடி மீது பட்டுவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இவர்கள் அளித்த வாக்குமூலத்தில் உள்ள உண்மை தன்மை குறித்து நான்கு பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Actor vishal, Crime News