Home /News /entertainment /

மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு காயம்

மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு காயம்

விஷால்

விஷால்

ஏற்கனவே லத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பில் இரண்டு முறை காயமடைந்து விஷால் சிகிச்சை எடுத்துக் கொண்டார். 

  • News18
  • 1 minute read
  • Last Updated :
மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

லத்தி படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்.  இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.  அதில் பாடலின் தொடர்ச்சியாக சண்டைக் காட்சி வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

கல்குவாரியில் நடைபெற்ற அந்த படப்பிடிப்பில் எதிர்பாராத விதமாக விஷாலுக்கு கால் முட்டியில் பலத்த அடிபட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை அண்ணா நகர் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.

Also read... ரோசு ரோசு ரோசு அழகான ரோசு நீ... தமன்னாவின் நியூ ஆல்பம்!

ஏற்கனவே ஹைத்ராபாத்தில் நடைபெற்ற லத்தி படப்பிடிப்பில் விஷாலுக்கு பலத்த அடிபட்டது. அதன் காரணமாக கேரளா சென்று ஒரு மாதம் தங்கி சிகிச்சை எடுத்து வந்தார்.  அதைத்தொடர்ந்து மீண்டும் சென்னையில் நடந்த லத்தி படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஷாலுக்கு அடிபட்டது.

அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு விஷால் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது மார்க் ஆண்டனி படப்பிடிப்பிலும் விஷால் காயம் அடைந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor vishal, Entertainment

அடுத்த செய்தி