நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமித்ததை எதிர்த்து விஷால் தரப்பில் வழக்கு!

நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமித்ததை எதிர்த்து விஷால் தரப்பில் வழக்கு!
நடிகர் விஷால்
  • News18
  • Last Updated: November 8, 2019, 3:29 PM IST
  • Share this:
நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமித்ததை எதிர்த்து, நடிகர் விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐ.ஜி. கீதாவை நியமித்து, தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது.

இதற்கு எதிராக நீதிபதி ஆதிகேசவலு முன்பு, நடிகர் விஷால் தரப்பு இன்று காலை முறையிட்டது.


3000 உறுப்பினர்கள் உள்ள சங்கத்தில், மூன்று உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தனி அதிகாரியை நியமித்தது சட்டவிரோதமானது என விஷால் தரப்பு மனுவில் கூறியுள்ளது.

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்குகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதால் தனி அதிகாரி நியமனத்தை ரத்து செய்ய வேண்டுமென விஷால் தரப்பு கோரியது.

இது தொடர்பாக தாக்கல் செய்ய உள்ள வழக்கை அவசர வழக்காக விசாரிக்குமாறும் விஷால் தரப்பு கேட்டுக் கொண்டது.அதற்கு நீதிபதி ஆதிகேசவலு, நடிகர் சங்கத் தேர்தல் வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி கல்யாணசுந்தரம் முன் இந்த வழக்கையும் பட்டியலிட, பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதாக கூறினார்.

நடிகர் சங்கத்தின் பதவிக்காலம் நிறைவடைந்தும் விஷால் தரப்பு அதிகாரத்தை கையில் வைத்திருப்பதாகவும், நிர்வாகக் குளறுபடி நிலவுவதாக வந்த புகார்கள் காரணமாகவும் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

Also see...

First published: November 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்