கொரோனா தொற்றிலிருந்து மீண்டு 82 வயதில் உடற்பயிற்சி செய்து அசத்தும் நடிகர் விஷாலின் தந்தை.. (வீடியோக்கள்)

விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி 82 வயதில் உடற்பயிற்சி செய்து அசத்தும் வீடியோக்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன.

கொரோனா தொற்றிலிருந்து மீண்டு 82 வயதில் உடற்பயிற்சி செய்து அசத்தும் நடிகர் விஷாலின் தந்தை.. (வீடியோக்கள்)
விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி
  • News18 Tamil
  • Last Updated: September 16, 2020, 2:31 PM IST
  • Share this:
நடிகர் விஷாலின் தந்தையும், தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி 82 வயதில் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றி வருகிறார்.

ஜி.கே.ஃபிலிம் கார்ப்பரேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்களைத் தயாரித்தவர் ஜி.கே.ரெட்டி. தனது மகன் விஷாலை நாயகனாக வைத்து சண்டக்கோழி, திமிரு, தோரணை உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.

விஷால் பெயரில் தனியாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்ட பின்னர் ஜி.கே.ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பாக படங்கள் எதுவும் தயாரிக்கப்படவில்லை. இந்நிலையில் சமீபத்தில் விஷாலும் அவரது தந்தை ஜி.கே.ரெட்டியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் அதிலிருந்து மீண்டனர்.
ஜி.கே.ரெட்டி என்ற பெயரில் தனியாக யூடியூப் சேனல் நடத்தி வரும் விஷாலின் தந்தை, கொரோனாவிலிருந்து மீண்டு வந்தது குறித்தும் வீடியோ பதிவிட்டிருந்தார். மேலும் அந்த சேனலில் உடலமைப்பு, உடற்பயிற்சி குறித்தும் ஜி.கே.ரெட்டி வீடியோக்களை பதிவிட்டுள்ளார். அதில் வீட்டில் இருந்தபடியே எளிய முறையில் உடற்பயிற்சி செய்வது குறித்தும் தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

ஜி.கே.ரெட்டி 82 வயதில் உடற்பயிற்சி செய்து அசத்தும் வீடியோக்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன.
First published: September 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading