Vishal: தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது நடிகர் விஷால் காவல் நிலையத்தில் புகார்

விஷால்

தனக்கு மீண்டும் இதுபோன்ற பிரச்சினையில் ஈடுபடக்கூடாது என புகார் அளித்துள்ளதாக விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் ஆர்.பி.சவுத்ரி மீது நடிகர் விஷால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் தயாரிப்பாளரான ஆர்.பி.சவுத்ரி மீது காவல் துறையில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆர்.பி.சவுத்ரி தயாரிப்பாளர் மற்றும் விநோகிஸ்தராக மட்டும் அல்லாமல் திரைப்படங்களுக்கு பைனான்ஸ் தொழிலையும் செய்து வருகிறார். இவரிடம் நடிகர் விஷால் கடன் பெற்று அக்கடனை சென்ற பிப்ரவரி மாதமே முறைப்படி அளித்துவிட்டார். கடனுக்காக விஷால் தரப்பில் கையொப்பமிட்டு அளிக்கப்பட்ட செக் போன்ற பேப்பர்கள் இதுவரை ஆர்.பி.சவுத்ரி தரப்பு திருப்பி அளிக்கவில்லை என்றும், அதனை பற்றி விஷால் தரப்பில் கேட்டதற்கு, செக் மற்றும் அனைத்து பேப்பர்களும் தொலைந்து விட்டதாக கூறி அதற்கு பதிலாக ஒரு புதிய அக்ரிமென்ட் 100 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி கொடுத்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஏற்கனவே ஆம்பள என்ற திரைப்படத்திற்கு கோத்தாரி என்ற பைனான்சியர் பணத்தை வாங்கிக்கொண்டு ப்ரோ நோட் திரும்பி தராமல் பிரச்சினையில் ஈடுபட்டதாக விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையின் அடிப்படையில் புரோனோட் திரும்ப பெறாததால் அதை பயன்படுத்தி, ஆம்பள படத்தை வெளியிட தடை கோரி சட்டபூர்வமான நடவடிக்கையை கோத்தாரி மோசடியாக எடுத்ததாகவும், அதேபோன்று ஆர்பி சவுத்ரி புரோநோட் தொலைந்து விட்டதாக தெரிவித்து அடிப்படையில், தனக்கு மீண்டும் இதுபோன்ற பிரச்சினையில் ஈடுபடக்கூடாது என புகார் அளித்துள்ளதாக விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விஷால் சார்பில் அவருடைய மேனஜர் ஹரிகிருஷ்ணன், புகார் மனுவை காவல் துறையிடம் அளித்துள்ளார். அந்த புகார் மனுவோடு ஆர்.பி. சவுத்ரி தரப்பு செக் மற்ற இதர ஆவணங்களுக்காக அளித்த 100 ரூபாய் ஸ்டாம்ப் அக்ரிமெண்ட் காப்பியும் இணைத்துள்ளனர். இதுதொடர்பாக மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: