Home /News /entertainment /

போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிராக நடிகர் விஷால் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ…

போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிராக நடிகர் விஷால் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ…

நடிகர் விஷால்

நடிகர் விஷால்

Actor vishal : போதைப் பொருள் பழக்கத்தை சமுதாயத்தில் இருந்து அறவே நீக்க, அஸ்ரா கார்க் அவர்கள் என்ன உதவி கேட்டாலும் ஒரு சாமானியனாக செய்துதர தயாராக இருக்கிறேன்.

    போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிராக நடிகர் விஷால் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    வீடியோவில் விஷால் கூறியிருப்பதாவது-

    சமுதாயத்தில் போதைப் பொருளை அகற்றுவதற்கு காவல்துறை அதிகாரி அஸ்ரா கார்க் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அவருக்கு எனது சல்யூட். ஒரு சாமானியனாக அவருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மற்ற மாநிலங்களில் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதை கேள்விப் படுகிறோம். ஆனால் தமிழ்நாட்டில் போதைப் பொருள் ஆழமாக புகுந்திருப்பது என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    விளம்பரப் படங்களில் நடிக்கப் போகும் அமிதாப் பச்சனின் பேத்தி… முன்னணி நடிகைகள் வாழ்த்து

    மகிழ்ச்சியாக இருக்க விரும்பும் நபர்களுக்கு நம் நாட்டில் டாஸ்மாக் உள்பட எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஆனால் போதைப்பொருள் பயன்படுத்துதல் என்பது வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும். இதனை பள்ளி, கல்லூரி மாணவர்கள் அறவே தவிர்க்க வேண்டும்.



    ஒரு பெரும் நம்பிக்கையில் பெற்றோர் பிள்ளைகளை கல்வி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அவர்களது நம்பிக்கை வீண் போகக் கூடாது. மாணவர்கள், இளைஞர்களின் வெற்றியை அவர்களது பெற்றோரைப் போன்று சமுதாயமும் எதிர்பார்க்கிறது.

    அந்த வகையில் போதைப் பொருளுக்கு எதிராக காவல்துறை அதிகாரி அஸ்ரா கார்க் அவர்கள் எடுத்திருக்கும் நடவடிக்கை எனக்கு ஒரு சினிமா காட்சியை விட வியப்பாக இருக்கிறது.

    Maaveeran Title Announcement | எதிர்த்து நின்றான் மாவீரன்... வெளியானது சிவகார்த்திகேயனின் டைட்டில் வீடியோ!

    போதைப் பொருள் பழக்கத்தை சமுதாயத்தில் இருந்து அறவே நீக்க, அஸ்ரா கார்க் அவர்கள் என்ன உதவி கேட்டாலும் ஒரு சாமானியனாக செய்துதர தயாராக இருக்கிறேன்.

    இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor vishal

    அடுத்த செய்தி