ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தொடங்கியது விஷால் - கார்த்திக் தங்கவேலு படத்தின் பணிகள்!

தொடங்கியது விஷால் - கார்த்திக் தங்கவேலு படத்தின் பணிகள்!

விஷால், கார்த்திக் தங்கவேலு

விஷால், கார்த்திக் தங்கவேலு

கார்த்திக் தங்கவேலு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நடிகர் விஷாலை சந்தித்து கதை கூறி இருந்தார். விஷால் மற்ற திரைப்படங்களில் நடித்து வந்து கொண்டிருந்ததால் கார்த்திக் தங்கவேலுக்கு கால்ஷீட் வழங்காமல் இருந்தார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் விஷால் இயக்குநர் கார்த்திக் தங்கவேலு இயக்கத்தில் உருவாகும் படத்திற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஷால் தற்போது மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இதற்கான 70% படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்துவிட்டன. இதைத்தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பை வரும் 18ஆம் தேதி தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். மார்க் ஆண்டனி திரைப்படம் மார்ச் மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும் என படக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இதைத்தொடர்ந்து அடங்கமறு படத்தின் இயக்குனர் கார்த்திக் தங்கவேலு இயக்கம் புதிய திரைப்படத்தில் நடிகர் விஷால் நடிக்க உள்ளார். கார்த்திக் தங்கவேலு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நடிகர் விஷாலை சந்தித்து கதை கூறி இருந்தார். விஷால் மற்ற திரைப்படங்களில் நடித்து வந்து கொண்டிருந்ததால் கார்த்திக் தங்கவேலுக்கு கால்ஷீட் வழங்காமல் இருந்தார்.

இந்த நிலையில் தற்போது விஷால் - கார்த்திக் தங்கவேலு கூட்டணி உறுதியாகி உள்ளது. அதற்கான படப்பிடிப்பு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தொடங்கும் என பட குழு தரப்பில் கூறுகின்றனர். அந்த திரைப்படத்தை 5 ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார். இந்த திரைப்படம் கிரைம் திரில்லர் வகையில் உருவாகும் என கூறப்படுகிறது.

Also read... தூர்தர்ஷனில் சீரியல்.. கனடாவில் ஒரு சாலை.. ஏ ஆர் ரஹ்மான் பற்றிய சுவாரஸ்ய தகவல்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor vishal