படப்பிடிப்பில் விஷாலுக்கு பலத்த காயம்... மருத்துவமனையில் அனுமதி...!

அயோக்யா படத்தை அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வருகிறார்.

news18
Updated: March 28, 2019, 12:19 PM IST
படப்பிடிப்பில் விஷாலுக்கு பலத்த காயம்... மருத்துவமனையில் அனுமதி...!
நடிகர் விஷால்
news18
Updated: March 28, 2019, 12:19 PM IST
படப்பிடிப்பின்போது நடிகர் விஷாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைபெறும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அயோக்யா படத்தை அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துருக்கி நாட்டில் நடைபெற்று வருகிறது. படத்தின் சண்டைக்காட்சி படமாக்கப்படும் போது நடிகர் விஷாலுக்கு கை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

பைக்கில் இருந்து தவறி விழுந்ததால் விஷாலுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் படக்குழுவினர் அதை உறுதிப்படுத்தவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஷால் விரைவில் குணமடைய வேண்டும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.ஜெயலலிதாவையே பார்த்த எங்களுக்கு இவர்கள் எம்மாத்திரம் - சீமான் பிரசாரம் - வீடியோ

First published: March 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...