Home /News /entertainment /

Jailer: ஜெயிலர் ரஜினிக்கு வில்லனாகும் விஷால் பட நடிகர் விநாயகன்

Jailer: ஜெயிலர் ரஜினிக்கு வில்லனாகும் விஷால் பட நடிகர் விநாயகன்

விநாயகன்

விநாயகன்

ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக மலையாள நடிகர் விநாயகன் நடிக்க உள்ளார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஜெயிலர் திரைப்படத்தில் மலையாள நடிகர் விநாயகன் வில்லனாக நடிக்கிறார். 

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் உள்ள பழைய உட்லண்ட்ஸ் திரையரங்கில் தொடங்கியது. காவல் நிலையத்தில் நடக்கும் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன.



அதேசமயம் தயாரிப்பு நிறுவனம் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்டு படப்பிடிப்பு தொடங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த முதல் பார்வையில் இடம் பிடித்த ரஜினிகாந்தின் தோற்றம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்தை தவிர ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அருண் விஜய்யின் சினம் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

இந்த நிலையில் மலையாள நடிகர் விநாயகன் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவருக்கான காட்சி படமாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே விஷால் நடித்த திமிரு திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைபோல் மலையாள சினிமாவில் விநாயகன் முக்கிய நடிகராக வளர்ந்துள்ளார். அவர் தற்போது ரஜினிகாந்துடன் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்.
Published by:Shalini C
First published:

Tags: Rajinikanth

அடுத்த செய்தி