நடிகர் விமலின் மனைவி அக்ஷயா வரும் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார்.
கிராமப்புற கதைகளை மையப்படுத்திய 'களவாணி', 'வாகை சூட வா', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' மற்றும் 'கலகலப்பு' போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விமல். கொரோனா பெருந்தொற்றின் போது, தனது சொந்த ஊரான மணப்பாறையில் நண்பர்களுடன் சேர்ந்து வீதியில் கிருமிநாசினி தெளித்தார். அந்த வீடியோ இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

விருப்ப மனு தாக்கல் செய்த அக்ஷயா
அப்போது பேசிய விமல், 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் தனது மனைவி அக்ஷயா ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளித்து வருவதை நினைவுக் கூர்ந்து பாராட்டியிருந்தார்.
இந்நிலையில், மணப்பாறை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார் விமலின் மனைவி அக்ஷயா. விமலும் அவரது மனைவி அக்ஷயாவும் நடிகர்-தயாரிப்பாளர் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து விருப்ப மனுவை ஒப்படைத்துள்ளனர். அக்ஷயாவுக்கு திமுக சீட்டு தருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்