தமிழ் சினிமா நடிகர் விமல் மீது
சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் கோபி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், களவாணி, களவாணி-2 உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்த விமல் மன்னர் வகையறா என்ற படத்தை எடுத்தபோது தன்னிடம் கடனாக ரூபாய் 5 கோடி வாங்கினார். அந்தப் படத்தின் லாபத்திலும் பங்கு தருவதாக என்னிடம் தெரிவித்தார்.
ஆனால், இதுவரை என்னிடம் வங்கிய கடன் தொகை ரூபாய் 5 கோடியை நடிகர் விமல் திருப்பித்தரவில்லை. அவர் தற்போது 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் எனக்கு தரவேண்டிய ரூ.5 கோடியை திருப்பித்தராமல் மோசடி செய்து வருகிறார்.
Must Read : மணமேடையில் இருந்து திடீரென ஓட்டம் பிடித்த மணப்பெண்... வைரலாகும் வீடியோ - கேரளாவில் பரபரப்பு
கொடுத்த பணத்தை கேட்டால் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே நடிகர் விமல் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, அவர் எனக்கு தரவேண்டிய ரூ.5 கோடி பணத்தை வசூலித்து தரும்படி வேண்டுகிறேன் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.