முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வெளியானது கோப்ரா படத்திலிருந்து தராங்கினி பாடல் லிரிக்கல் வீடியோ

வெளியானது கோப்ரா படத்திலிருந்து தராங்கினி பாடல் லிரிக்கல் வீடியோ

விக்ரம்

விக்ரம்

விக்ரம் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீனிதி ஷெட்டி நடித்துள்ளார்.

  • Last Updated :

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா படத்திலிருந்து தராங்கினி பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

விக்ரம் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎஃப் 1 மற்றும் 2ம் பாகங்களில் இடம்பெற்ற ஸ்ரீனிதி ஷெட்டி நடித்துள்ளார். இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரித்துள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் இந்த படத்தில் இருந்து 2 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 7 அல்லது அதற்கும் அதிகமான தோற்றங்களில் விக்ரம் நடித்திருப்பதாக கூறப்படுவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கடைசியாக விக்ரமுக்கு வெளியான படங்கள் வரவேற்பை பெறாத நிலையில் 2 ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வரும் இந்தப் படம் மெகா ஹிட்டாக அமையும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் உள்ளனர்.

Also read... Iravin Nizhal Review: எப்படி இருக்கிறது பார்த்திபனின் இரவின் நிழல் படம்?

மேலும், தமிழ்நாட்டில் கோப்ரா படத்தை வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

' isDesktop="true" id="771053" youtubeid="93VBGmmKoKM" category="cinema">

ஆகஸ்ட் 11ம் தேதி கோப்ரா படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோப்ரா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘தராங்கினி’ பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Actor Vikram, Lyrical Video Songs