முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விக்ரம் நடித்த கோப்ரா திரைப்படம் வெளியானது...!

விக்ரம் நடித்த கோப்ரா திரைப்படம் வெளியானது...!

கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம்

கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம்

படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்னாளினி ரவி, மீனாட்சி, இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம், நடிப்பில் கோப்ரா திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்னாளினி ரவி, மீனாட்சி, இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் விநாயகர் சதுர்த்தியான இன்று அதிகாலை சிறப்புக்காட்சியுடன் திரையரங்குகளில் வெளியானது.

Also read... திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் படங்கள் ஒரு லிஸ்ட்!

சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் அதிகாலையில் ரசிகர்களுக்காக சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு விக்ரமின் படம் வெளியாகியுள்ளதால், ரசிகர்கள் பட்டாசு வெடித்து ஆரவாரத்துடன் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vikram, Cobra Movie