Home /News /entertainment /

தள்ளி செல்கிறது விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் வெளியீடு

தள்ளி செல்கிறது விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் வெளியீடு

கோப்ரா படத்தில் விக்ரம்

கோப்ரா படத்தில் விக்ரம்

கோப்ரா படத்திற்கான கிராபிக்ஸ் வேலைகள் முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆக்ஸ்ட் 11-ம் தேதி வெளியீட்டில் இருந்து கோப்ரா படம் தள்ளி வைக்கப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

  • News18
  • Last Updated :
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் வெளியீடு தள்ளி செல்கிறது. 

டிமாண்டி காலனி படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் கோப்ரா. இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் இயக்குநர் அவ்வப்போது கதையில் மாற்றம் கொண்டுவந்ததாலும், சரியான திட்டமிடல் இல்லாததாலும் படத்தின் வேலைகள் முடியவில்லை என தகவல்கள் பரவின.

மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற கோப்ரா படப்பிடிப்பு ஒருவழியாக  கடந்த  பிப்ரவரி மாதம் முடிவடைந்தது. அதை தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வந்தன. அதனால் மே மாதம் 27-ம் தேதி கோப்ரா படத்தை வெளியிட தயாரிப்பாளர் லலித் குமார் திட்டமிட்டார்.

ஆனால் படத்தின் இறுதிகட்ட வேலைகள் முடிவடையாததால் அந்த தேதியில் படம் வெளியாகவில்லை. இதனால் ஆகஸ்ட் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்துவிடும் எனவும் இயக்குனர் தரப்பில் தயாரிப்பு நிறுவனத்திற்கு கூறப்பட்டுள்ளது.

Also read... குலுகுலு படத்தின் மாட்னா காலி பாடலின் லிரிக்கல் வீடியோ ரிலீஸ்!

இதனால் ஆகஸ்ட் 11ம் தேதி படம் வெளியாகும் என தயாரிப்ப நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதற்கான புரமோஷன் வேலைகளிலும் இறங்கினர். அத்துடன் கோப்ரா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.

இந்த நிலையில் கோப்ரா படத்திற்கான கிராபிக்ஸ் வேலைகள் முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆக்ஸ்ட் 11-ம் தேதி வெளியீட்டில் இருந்து கோப்ரா படம் தள்ளி வைக்கப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அந்த தேதியில் தங்கள் படத்தை திரைக்கு கொண்டு செல்ல சில தயாரிப்பாளர்கள் முயற்சிக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vikram, Cobra Movie

அடுத்த செய்தி