16 வயதினிலே சப்பானி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை - விக்ரம்

கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடித்துள்ள ‘கடாரம் கொண்டான்’ படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.

news18
Updated: July 3, 2019, 9:16 PM IST
16 வயதினிலே சப்பானி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை - விக்ரம்
கடாரம் கொண்டான்
news18
Updated: July 3, 2019, 9:16 PM IST
16 வயதினிலே சப்பானி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை என்று நடிகர் விக்ரம் கடாரம் கொண்டான் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.

கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடித்துள்ள ‘கடாரம் கொண்டான்’ படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. பட்டினப்பாக்கத்தில் உள்ள லீலா பேலஸ்-இல் நடைபெற்ற ட்ரெய்லர் வெளியிட்டு விழாவில் கமல்ஹாசன், விக்ரம், அக்‌ஷராஹாசன், இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜூலை 19-ம் தேதி கடராம் கொண்டான் திரைப்படம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விழாவில் நடிகர் விக்ரம், ‘கமல்ஹாசன் அவர்கள் நடித்த அனைத்து படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். நாயகன், வாழ்வே மாயம், 16 வயதினிலே ஆகிய படங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. யாராவது எந்த ரீமேக் படத்தில், யார் கதாபாத்திரத்தில் நடிக்க போகிறீர்கள் என்று கேட்டால், 16 வயதினிலே படத்தில் கமல்ஹாசன் நடித்த சப்பானி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை என்று சொல்லுவேன்.  கடாரம் கொண்டான் படத்தை கமல்ஹாசன் அவர்கள் தயாரிக்கிறார் என்றவுடன் நடிக்க சம்மதித்தேன். அதற்குப் பிறகு கதை கேட்ட போது வித்தியாசமாக இருந்தது. துருவநட்சத்திரம் போல் கடாராம் கொண்டான் படமும் ஸ்டைலிஷான படமாக இருக்கும்’ என்று பேசியுள்ளார்


First published: July 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...