ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''சிரிப்பை அடக்க முடியல.. வா ராஜா வா..'' இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வீடியோவை பகிர்ந்த விக்ரம்!

''சிரிப்பை அடக்க முடியல.. வா ராஜா வா..'' இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வீடியோவை பகிர்ந்த விக்ரம்!

ரிஷி சுனக் - விக்ரம்

ரிஷி சுனக் - விக்ரம்

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை புகழ்ந்து விக்ரம் ட்வீட் செய்துள்ளார்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தீபாவளியன்று ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட 42 வயதான ரிஷி சுனக் பிரிட்டனின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். ரிஷியின் தாத்தா பாட்டி ஆகியோர் பிரிட்டிஷ் ஆட்சியின்போது இந்தியாவில் இருந்து ஆப்பிரிக்க நாட்டிற்கு சென்று, பின் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தவர்கள்.

  ரிஷி சுனக்

  அவர்கள் இங்கிருந்து செல்லும் போது அது பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால், அவர்களின் பிறந்த இடம் தற்போது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ரன்வாலா. பிரதமர் ரிஷி சுனக் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் இந்து-பஞ்சாபி பெற்றோருக்கு பிறந்தார். அவர்களது பெற்றோரும் இங்கிலாந்தில் பிறந்தவர்கள் தான். இப்படியாக இங்கு அவர் இந்தியாவா, பாகிஸ்தானா என்ற விவாதம் நடந்து வருகிறது.

  இங்கிலாந்து செல்ல டிக்கெட்டுக்கு கூட பணம் இல்லாமல் தவித்த பாட்டி.. நாட்டையே ஆள போகும் பேரன்... ரிஷி சுனக் பற்றி சுவாரஸ்ய தகவல்

  அதே வேளையில் ரிஷு சுனக் வெள்ளையர் அல்லாத ஒருவர் என இங்கிலாந்தில் சிலர் எதிர்ப்புக்குரலை கொடுத்து வருகின்றனர். ஆனால் வெள்ளையர் அல்லாத ஒருவரால் மக்களின் பிரச்னைகளை புரிந்துகொள்ள முடியாது என சிலர் குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர். நிறவெறியை ஊக்குவிக்கும் வகையில் பேசிய சிலரின் வீடியோவுக்கு தி டெய்லி ஷோ நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பதில் அளித்துள்ளார்.

  அதில் ''ஒருவரின் திறமையை நிறத்தை வைத்து மதிப்பிடக்கூடாது. அவரது கொள்கை திறமையை வைத்தே மதிப்பிட வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பகிர்ந்த நடிகர் விக்ரம் ''இதை பார்த்தது முதல் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சாரி, இதனை பகிர வேண்டாம் என நினைத்தேன். இந்தியாவுக்கு பெருமைதான். அமெரிக்காவின் குடியரசுத் துணைத் தலைவர் ஒரு இந்தியர் இப்போது முதல் இந்திய வம்சாவளி பிரிட்டிஷ் பிரதமர். வா ராஜா வா'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Actor Vikram, Rishi Sunak