முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் போஸ்டர் வெளியீடு

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் போஸ்டர் வெளியீடு

விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு

Vikram Prabhu : விக்ரம் பிரபு நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

விக்ரம் பிரபு நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாணாக்காரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் காவலராக நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களை விக்ரம் பிரபு பெற்றார்.

ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளிவந்தாலும், விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் இந்தப் படம் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அடுத்ததாக விக்ரம் பிரபு நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ளது.

‘சோழர்களின் ஆட்சிக்காலம்’ – வரவேற்பை பெறும் பொன்னியின் செல்வன் புதிய வீடியோ

இந்தப் படத்தில் பார்த்திபேந்திர பல்லவன் என்ற கேரக்டரில், ஆதித்த கரிகாலனான விக்ரமுக்கு நண்பராக விக்ரம் பிரபு நடித்துள்ளார். இந்த கேரக்டர் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான ஒன்றாகும்.

இந்நிலையில், விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த படத்திற்கு ரெய்டு என்று பெயர் வைத்துள்ளனர். இதுதொடர்பான போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெறுள்ளது.

பா.ரஞ்சித் பட பூஜையில் விபூதியை தவிர்த்த நடிகர் விக்ரம் - ஜி.வி.பிரகாஷ், கேட்டு வைத்துக்கொண்ட சாண்டி.. சுவாரஸ்யங்கள்

ரெய்டு படத்திற்கு இயக்குனர் முத்தையா வசனம் எழுதியுள்ளார். கார்த்தி இயக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். படத்தில் இடம்பெறும் நடிகர்கள் குறித்த விபரம் விரைவில் வெளியாகவுள்ளது.

First published:

Tags: Vikram Prabhu