Home /News /entertainment /

கோப்ரா படத்திற்காக விக்ரம் வாங்கியது இத்தனை கோடிகளா? புதிய தகவலால் பரபரப்பு

கோப்ரா படத்திற்காக விக்ரம் வாங்கியது இத்தனை கோடிகளா? புதிய தகவலால் பரபரப்பு

கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம்

கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம்

Cobra Vikram : அதிக பட்ஜெட் காரணமாக கோப்ரா திரைப்படம் மிகப்பெரும் வசூலை குவிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதை மறுக்க முடியாது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    கோப்ரா படத்திற்காக விக்ரம் வாங்கிய சம்பளத் தொகை குறித்த தகவல்கள் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளன. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோப்ரா திரைப்படம் நாளை மறுதினம் ரிலீசாகவுள்ளது.

    லலித் குமார் தயாரிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் நாளை மறுதினம் ஆகஸ்ட் 31-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் விக்ரமுடன் கே.ஜி.எஃப் நடிகை ஸ்ரீநிதி, மிருணாளினி, மீனாட்சி கோவிந்தராஜன், கே.எஸ். ரவிக்குமார், ரோபோ சங்கர், முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    மொத்தம் 3 மணி நேரம் 3 நிமிடம் 3 வினாடிகள் ஓடக்கூடிய கோப்ரா படம் எடிட் செய்யப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரகுமான் இசையில், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

    மலையாள நடிகைக்கு கோவில் கட்டிய தமிழ்நாட்டு ரசிகர்…நடிகை பகிர்ந்த சுவாரசிய தகவல்

    கோப்ரா படத்தில் சுமார் 10 கெட்டப்புகளில் விக்ரம் இடம் பெறுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் முதல் நாள் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு ஆரம்பமாகிறது.

    இந்நிலையில் கோப்ரா படத்திற்காக விக்ரம் சுமார் 25 கோடி ரூபாய் வரை பெற்றிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. படத்தின் பட்ஜெட் 100  கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள.

    ஆலியா பட் படத்தை தமிழில் நடிக்க விரும்புகிறேன் – வாணி போஜன் பேட்டி

    அதிக பட்ஜெட் காரணமாக கோப்ரா திரைப்படம் மிகப்பெரும் வசூலை குவிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதை மறுக்க முடியாது. ரசிகர்களை ஈர்க்கும் பட்சத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு ஹவுஸ்புல் காட்சிகளாக படம் ஓடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
    Published by:Musthak
    First published:

    Tags: Cobra Movie, Vikram

    அடுத்த செய்தி