Home /News /entertainment /

நடிகர் விக்ரம் – பா. ரஞ்சித் இணையும் படத்தின் அப்டேட்… ஷூட்டிங் தொடங்கும் தேதி குறித்த தகவல்

நடிகர் விக்ரம் – பா. ரஞ்சித் இணையும் படத்தின் அப்டேட்… ஷூட்டிங் தொடங்கும் தேதி குறித்த தகவல்

விக்ரம் - பா. ரஞ்சித்

விக்ரம் - பா. ரஞ்சித்

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நடிகர் விக்ரம், பா. ரஞ்சித் இணையும் படத்தின் அப்டேட் வெளிவந்துள்ளது. அதிக பொருட் செலவில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது.

    சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பா.ரஞ்சித் தற்போது நட்சத்திரம் நகர்கிறது என் படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடல் காட்சிகள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

    ஆகஸ்ட் 31ம் தேதி நட்சத்திரம் நகர்கிறது படம் வெளியாகவுள்ளது. இதையடுத்து விக்ரம் நடிக்கும் அவரது 61-வது படத்தை ரஞ்சித் இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

    அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்கும் இளம் இயக்குநர்?

    இன்னும் பெயரிடப்படாத விக்ரமின் 61வது படம், கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் பகுதிகளில் படமாக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த படத்திற்கு மைதானம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், விக்ரம் – ரஞ்சித் இணையும் படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் மாதத்தின் இறுதி வாரம் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

    ட்விட்டரில் இணைந்தார் நடிகர் விக்ரம்… மளமளவென பின்தொடரும் நெட்டிசன்கள்…

    விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட்  31ம்தேதி திரைக்கு வரவுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    விக்ரம் நடித்துள்ள இன்னொரு படமான பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30ம்தேதி திரைக்கு வரவுள்ளது. கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vikram

    அடுத்த செய்தி