• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிரபலத்தை சந்தித்த விக்ரம் - வைரலாகும் நெகிழ்ச்சிப் பதிவு!

பிரபலத்தை சந்தித்த விக்ரம் - வைரலாகும் நெகிழ்ச்சிப் பதிவு!

விக்ரம்

விக்ரம்

10 நிமிடம் என்று திட்டமிடப்பட்ட அந்த சந்திப்பு 2 மணி நேரம் தொடர்ந்ததாகவும், பாடகி சுசீலாவின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது.

  • Share this:
    நடிகர் விக்ரம் திடீரென பாடகி சுசீலாவை சந்தித்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் விக்ரம். தற்போது கோப்ரா, துருவ நட்சத்திரம், மஹான், பொன்னியின் செல்வன், மஹாவீர் கர்ணா ஆகியப் படங்களில் நடித்து வருகிறார். தனக்குக் கொடுக்கப்படும் ரோல்களுக்கு ஏற்றவாறு ரிஸ்க் எடுக்க தயங்காதவர் விக்ரம். சேது, பிதாமகன், காசி, தெய்வதிருமகள், ஐ என அவர் ரிஸ்க் எடுத்த படங்களை பட்டியலிடலாம்.

    தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் அவர் ஆதித்யா கரிகாலனாக நடித்துள்ளார். அதோடு தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து ‘மஹான்’ படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இதனை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.

    இந்நிலையில் பாடகி சுசீலாவை சமீபத்தித்தில் சந்தித்திருக்கிறார் விக்ரம். சுசீலாவின் தீவிர ரசிகரான விக்ரம், அவரை நேரில் சந்திக்க ஆசைப்பட்டதாகவும், இதையடுத்து இந்த சந்திப்பு நிகழ்ந்ததாகவும், 10 நிமிடம் என்று திட்டமிடப்பட்ட அந்த சந்திப்பு 2 மணி நேரம் தொடர்ந்ததாகவும், பாடகி சுசீலாவின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது. சுசீலாவை சில பாடல்கள் பாட சொல்லி கேட்ட விக்ரம், தானும் சேர்ந்து பாடியுள்ளார். சுசீலாவுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் தான் அவரை சந்திக்க அடிக்கடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



    முன்னணி நடிகரான விக்ரமின் ஃபேன் பாய் மொமெண்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: