Home /News /entertainment /

ட்விட்டரில் இணைந்தார் நடிகர் விக்ரம்… மளமளவென பின்தொடரும் நெட்டிசன்கள்…

ட்விட்டரில் இணைந்தார் நடிகர் விக்ரம்… மளமளவென பின்தொடரும் நெட்டிசன்கள்…

விக்ரம்

விக்ரம்

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படம் இந்த மாதம் 31ம்தேதி திரைக்கு வருகிறது. அவரது இன்னொரு படமான பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி ரிலீசாகிறது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நடிகர் விக்ரம் சமூக வலைதளமான ட்விட்டரில் இன்று இணைந்துள்ளார். இதனை ட்விட்டர் உறுதி செய்து நீல வண்ண டிக் கொடுத்துள்ள நிலையில், அவரை நெட்டிசன்கள் மளமளவென பின் தொடர்ந்து வருகின்றனர்.

    சமூக வலைதளமான ட்விட்டரை பெரும்பாலான நடிகர், நடிகைகள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் தங்களைப் பற்றிய பதிவுகள், ஃபோட்டோ உள்ளிட்டவற்றை அவர்கள் பதிவு செய்கிறார்கள். குறிப்பாக தங்களின் பட வெளியீட்டின்போது  புரொமோஷன் பணிகளுக்கு ட்விட்டர் கணக்குகள் அதிகம் உதவுகின்றன.

    தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல், சூர்யா, சிம்பு, கார்த்தி உள்ளிட்ட பெரும்பாலான திரை பிரபலங்கள் ட்விட்டரை பயன்படுத்தி அதில் ஆக்டிவாகவும் உள்ளனர். அஜித் எந்த சமூக வலைதளங்களிலும் இடம்பெறவில்லை.

    விஜய் சேதுபதியுடன் பிறந்த நாளை கொண்டாடிய மாளவிகா மோகனன்... புகைப்படங்கள் வைரல்

    நடிகர் விக்ரம் இன்ஸ்டாகிராமில் மட்டுமே கணக்கு வைத்திருந்த நிலையில் இன்று ட்விட்டரில் கணக்கை தொடங்கியுள்ளார். ரசிகர்கள் அவரை அன்புடன் அழைக்கும் சியான் (@Chiyaan) என்ற யூசர் ஐடியில் விக்ரமின் அக்கவுன்ட் ஓபன் செய்யப்பட்டுள்ளது.

    இந்த தகவலை அறிந்த அவரது ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் விக்ரம் ஐடியை விறுவிறுவென ஃபாலோ செய்யத் தொடங்கியுள்ளனர்.

    விக்ரம் ட்விட்டர் அக்கவுன்ட்டை பின் தொடரை இங்கே க்ளிக் செய்யவும்

    விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படம் இந்த மாதம் 31ம்தேதி திரைக்கு வருகிறது. அவரது இன்னொரு படமான பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி ரிலீசாகிறது. இந்த படங்களைத் தொடர்ந்து அவர் பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் இணைகிறார்.

    ஏற்கனவே கிடப்பில் போடப்பட்டுள்ள துருவ நட்சத்திரம் படமும் விரைவில் முடிவக்கப்பட்டு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vikram

    அடுத்த செய்தி