ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தங்கலான் பட கெட்டப்புடன் பொன்னியின் செல்வன் விழாவில் பங்கேற்ற விக்ரம்… கவனம் ஈர்க்கும் புதிய ஸ்டில்ஸ்

தங்கலான் பட கெட்டப்புடன் பொன்னியின் செல்வன் விழாவில் பங்கேற்ற விக்ரம்… கவனம் ஈர்க்கும் புதிய ஸ்டில்ஸ்

விக்ரம்

விக்ரம்

தங்கலான் படத்தை பா. ரஞ்சித் இயக்கி வருகிறார். பான் இந்தியா படமாக தங்கலான் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களுக்காக நீண்ட தலைமுடி வைத்திருந்த விக்ரம், தனது அடுத்த படத்திற்காக கெட்டப்பை மாற்றியுள்ளார்.

  கோலிவுட்டில் ரூ. 500 கோடி வசூலித்திற்கும் பொன்னியின் செல்வன் படத்தின் சக்சஸ் மீட் இன்று நடைபெற்றது. இதில் இயக்குனர் மணிரத்னம், தயாரிப்பாளர் சுபாஸ்கரன், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  நிகழ்ச்சியில் பேசிய விக்ரம் பொன்னியின் செல்வன், படம் என்பதை விட, அது ஒரு உணர்ச்சி, எமோஷன் என நெகிழ்ந்தார். இந்த தலைமுறையினரும் படத்தை கொண்டாடுகின்றனர்.  படத்தை பார்த்து விட்டோம்,  புத்தகத்தையும் ஒரு முறை படிக்கிறோம் என்று தெரிவிக்கின்றனர். இது மகிழ்ச்சியாக உள்ளது.

  பொன்னியின் செல்வன் படத்தின் சக்சஸ் மீட் புகைப்படங்கள்…

  இந்த படத்திற்காக டிவிட்டர், பேஸ்புக் போன்ற இணையதளங்களில் பார்த்துக் கொண்டே இருந்தேன். வீட்டில் இருந்தவர்கள் அடுத்த படத்திற்கு செல்ல வேண்டும் அது இதிலிருந்து வெளியே வா என்று கூறினார்கள் எனவும் தெரிவித்தார்.

  இந்த திரைப்படத்தில் கதாபாத்திரங்கள் மீது இருக்கும் அன்பு,  எங்களை வந்து சேர்ந்து உள்ளது எனவும் விக்ரம் நெகிகழ்ந்தார். அத்துடன் சக நடிகர்களுக்கும் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

  31 வருடங்களை நிறைவு செய்யும் ரஜினியின் தளபதி… சுவாரஸ்ய காட்சிகளின் ரிவ்யூ…

  பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அடுத்த ஆண்டு கோடை விடுமுறையையொட்டி பொன்னியின் செல்வன் படத்தின் 2ஆம் பாகம் வெளிவரவுள்ளது.

  விக்ரம்

  கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் படங்களுக்காக நீண்ட தலைமுடி வைத்திருந்த விக்ரம், தங்கலான் படத்திற்காக ஹேர்ஸ்டைலை மாற்றியுள்ளார். அவரது இந்த புதிய கெட்டப் கவனம் ஈர்த்து வருகிறது.

  ' isDesktop="true" id="831584" youtubeid="Dkbiq3QrpG4" category="cinema">

  தங்கலான் படத்தை பா. ரஞ்சித் இயக்கி வருகிறார். பான் இந்தியா படமாக தங்கலான் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

  சமீபத்தில் வெளிவந்த தங்கலான் படத்தின் அறிவிப்பு வீடியோ நல்ல வரவேற்பை பெற்றது. கேஜிஎஃப் கோலார் தங்க வயலின் வரலாற்று பின்னணியில் தங்கலான் படம் உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor Vikram