Home /News /entertainment /

Vikram: விக்ரமுக்கு மாரடைப்பு... திட்டமிட்டபடி இன்று மாலை வெளியாகுமா பொன்னியின் செல்வன் டீசர்?

Vikram: விக்ரமுக்கு மாரடைப்பு... திட்டமிட்டபடி இன்று மாலை வெளியாகுமா பொன்னியின் செல்வன் டீசர்?

விக்ரம்

விக்ரம்

Chiyaan Vikram: சேது, பிதாமகன், காசி, ஐ என படங்களின் கதாபாத்திரத்திற்காக அவர் எடுத்த ரிஸ்க், வேறு எந்த நடிகரும் நினைத்துக் கூட பார்க்க முடியாதது.

    நடிகர் விக்ரம் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் திட்டமிட்டபடி இன்று மாலை வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும், தனது கடின உழைப்புக்காக பெயர் பெற்றவர். சினிமாவில் டப்பிங் கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய விக்ரம் இன்று லட்சக் கணக்கான ரசிகர்களை பெற்றிருக்கிறார். சேது, பிதாமகன், காசி, ஐ என படங்களின் கதாபாத்திரத்திற்காக அவர் எடுத்த ரிஸ்க், வேறு எந்த நடிகரும் நினைத்துக் கூட பார்க்க முடியாதது.

    கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் உடலை வருத்தி நடிக்கவும் முடியும், கமர்ஷியல் படங்களில் மாஸ் ஹீரோவாக வெற்றி கொடியையும் நாட்ட முடியும் என நிரூபித்திருக்கிறார் விக்ரம். தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகியப் படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் கோப்ரா படத்தில் விக்ரம் 20 கெட்டப்புகளில் வருவதாக சொல்லப்படுகிறது.

    விஜய் - மகேஷ்பாபு ஃபோட்டோ ஷூட்டுடன் நின்று போன மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்

    மறுபுறம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ளார் விக்ரம். மனிரத்னம் இயக்கியுள்ள இந்தப்படத்தில் விக்ரமின் தோற்றம் முதன் முதலில் வெளியானது. அதில் கம்பீரமாக தோற்றமளித்திருந்தார் ஆதித்ய கரிகாலனாக இருந்த விக்ரம். அதன் பின்னர் கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி ஆகியோரின் தோற்றங்கள் வெளியாகின. இரண்டு பாகமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதுமட்டுமல்லாமல், இன்று மாலை பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் டீசரை நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார். அதே போல் இந்தியில் அமிதாப்பச்சனும், மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் மகேஷ்பாபுவும், கன்னடத்தில் ரக்‌ஷித் ஷெட்டியும் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விக்ரம் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் வெளியீடு!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதற்கிடையே தற்போது நடிகர் விக்ரம் மாரடைப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்டபடி பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் இது குறித்து படக்குழுவினர் ஏதேனும் அறிவிப்புகளை வெளியிடுகிறார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Vikram, Tamil Cinema

    அடுத்த செய்தி