Home /News /entertainment /

‘நெஜமாவே நான் தான்’ – ட்விட்டரில் முதல் வீடியோவை பதிவிட்ட நடிகர் விக்ரம்…

‘நெஜமாவே நான் தான்’ – ட்விட்டரில் முதல் வீடியோவை பதிவிட்ட நடிகர் விக்ரம்…

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம் இன்ஸ்டாகிராமில் மட்டுமே கணக்கு வைத்திருந்த நிலையில் இன்று ட்விட்டரில் கணக்கை தொடங்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நடிகர் விக்ரம் சமூக வலைதளமான ட்விட்டரில் இன்று இணைந்துள்ளார். இதனை ட்விட்டர் உறுதி செய்து நீல வண்ண டிக் கொடுத்துள்ள நிலையில், அவரை நெட்டிசன்கள் மளமளவென பின் தொடர்ந்து வருகின்றனர்.

    விக்ரம் வெளியிட்டுள்ள முதல் வீடியோ பதிவு ட்விட்டரில் வைராகியுள்ளது.

    சமூக வலைதளமான ட்விட்டரை பெரும்பாலான நடிகர், நடிகைகள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் தங்களைப் பற்றிய பதிவுகள், ஃபோட்டோ உள்ளிட்டவற்றை அவர்கள் பதிவு செய்கிறார்கள். குறிப்பாக தங்களின் பட வெளியீட்டின்போது  புரொமோஷன் பணிகளுக்கு ட்விட்டர் கணக்குகள் அதிகம் உதவுகின்றன.

    தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல், சூர்யா, சிம்பு, கார்த்தி உள்ளிட்ட பெரும்பாலான திரை பிரபலங்கள் ட்விட்டரை பயன்படுத்தி அதில் ஆக்டிவாகவும் உள்ளனர். அஜித் எந்த சமூக வலைதளங்களிலும் இடம்பெறவில்லை.

    உன்னால் எல்லாம் நான் அசிங்கப்பட மாட்டேன் - ரிஷப் பண்டிற்கு பதிலளித்த லெஜெண்ட் பட நாயகி

    நடிகர் விக்ரம் இன்ஸ்டாகிராமில் மட்டுமே கணக்கு வைத்திருந்த நிலையில் இன்று ட்விட்டரில் கணக்கை தொடங்கியுள்ளார். ரசிகர்கள் அவரை அன்புடன் அழைக்கும் சியான் (@Chiyaan) என்ற யூசர் ஐடியில் விக்ரமின் அக்கவுன்ட் ஓபன் செய்யப்பட்டுள்ளது.

    ட்விட்டரில் இணைந்த முதல் வீடியோ பதிவை விக்ரம் வெளியிட்டுள்ளார்.



    நெஜமாவே நான்தான், ட்விட்டரில் ரொம்ப லேட்டா இணைகிறேன் எனவீடியோ பதிவில் விக்ரம் குறிப்பிட்டுள்ளார்.

    நடிகர் விக்ரம் – பா. ரஞ்சித் இணையும் படத்தின் அப்டேட்… ஷூட்டிங் தொடங்கும் தேதி குறித்த தகவல்

    விக்ரம் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு வைரலாகியுள்ளது. விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படம் இந்த மாதம் 31ம்தேதி திரைக்கு வருகிறது. அவரது இன்னொரு படமான பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி ரிலீசாகிறது. இந்த படங்களைத் தொடர்ந்து அவர் பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் இணைகிறார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vikram

    அடுத்த செய்தி