Home /News /entertainment /

‘மகன் துருவுடன் நடித்த மகான் படம் தியேட்டரில் வெளியாகாதது வருத்தம் அளிக்கிறது’ – விக்ரம்

‘மகன் துருவுடன் நடித்த மகான் படம் தியேட்டரில் வெளியாகாதது வருத்தம் அளிக்கிறது’ – விக்ரம்

விக்ரம்

விக்ரம்

கோப்ரா படத்தில் இடம்பெற்றுள்ள விக்ரம், இர்பான் பதான், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி இயக்குநர் அஜய் ஞானமுத்து உள்ளிட்ட பட குழுவினர் ரசிகர்களுடன் Twitter Space தளத்தில் கலந்துரையாடினர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
துருவ் விக்ரமுடன் தான் இணைந்து நடித்த மகான் திரைப்படம் திரையரங்கில் வெளியாகாதது வருத்தம் அளிப்பதாக விக்ரம் கூறியுள்ளார்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் கோப்ரா திரைப்படம் வரும் 31ஆம் தேதி வெளியாகிறது. இதைத் தொடர்ந்து நடிகர்கள் விக்ரம், இர்பான் பதான், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி இயக்குநர் அஜய் ஞானமுத்து உள்ளிட்ட பட குழுவினர் ரசிகர்களுடன் Twitter Space தளத்தில் கலந்துரையாடினர்.

அதில் பேசிய நடிகர் விக்ரம், கோப்ரா திரைப்படத்தில் தோற்றங்களை விட எமோஷனல் டிராமா அதிகம் இருக்கும் என தெரிவித்தார். மேலும் மகான், கோப்ரா பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்களில் ஒரே தோற்றத்தில் நடித்தேன்.  அதன் காரணமாக ஒவ்வொரு திரைப்படத்திலும் நடிப்பை வித்தியாசப்படுத்துவதில் சவால் இருந்தது.

வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

குறிப்பாக கோப்ரா திரைப்படத்தில் பல கெட்டப் இருக்கின்றன. அதை ஒவ்வொன்றையும் வெவ்வேறு விதமாக செய்வது இன்னும் சவாலாக இருந்தது என தெரிவித்தார். தற்போது அந்த திரைப்படங்களை பார்க்கும் பொழுது மகிழ்ச்சி அளிப்பதாகவும் விக்ரம் பெருமிதமடைந்தார்.  இருந்தபோதிலும் மகான் திரைப்படம் திரையரங்கில் வெளியாகியிருக்க வேண்டும். துருவ் விக்ரமுடம் நான் இணைந்து நடித்த அந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகாதது இன்னும் வருத்தம் அளிக்கிறது எனவும் கூறினார்.

கோப்ரா படத்தின் டீசர்



மேலும் ரசிகர்கள் என்னுடைய திரைப்படத்தை திரையில் பார்த்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து திரையில் வெளியாக உள்ளன. அது தனக்கு மகிழ்ச்சியை கொடுத்திருப்பதாக விக்ரம் தெரிவித்தார்.

 

 
Published by:Musthak
First published:

Tags: Actor Vikram

அடுத்த செய்தி