தமிழ் சினிமாவில் வில்லனாகும் சியான் விக்ரமின் தம்பி!

news18
Updated: July 30, 2019, 1:40 PM IST
தமிழ் சினிமாவில் வில்லனாகும் சியான் விக்ரமின் தம்பி!
அரவிந்த் ஜான் விக்டர்
news18
Updated: July 30, 2019, 1:40 PM IST
முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரமின் சகோதரர் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகிறார்.

தோல்விகளைத் தாண்டி தனது தனித்திறமையாலும், கடின உழைப்பாலும் இன்று முன்னணி நடிகராக வலம்வருபவர் விக்ரம். சங்கர், பாலா என தமிழ்சினிமாவின் முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்திருக்கும் விக்ரம் தனது மகன் துருவ்வை ஆதித்ய வர்மா படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து நடிகர் விக்ரமின் தம்பி அரவிந்த் ஜான் விக்டர் எப்போ கல்யாணம் என்ற படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை இருதயராஜ் இயக்குகிறார். சாண்ட்ராமிக்சல், கேபிரியல், லாவண்யா, பூஜா ஆகிய 4 பேர் நாயகிகளாக நடிக்கும் இந்தப் படத்தில் ரஞ்சித்குமார், ரகு, மணி, லிவிங்ஸ்டன், மகாநதி சங்கர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பள்ளி படிப்பு முடித்து கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் தடம் மாறி செல்வதை கதைக்களமாக வைத்து இந்தப் படம் உருவாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

வீடியோ பார்க்க: அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்த ச்ந்தானம்

Loading...

First published: July 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...