Home /News /entertainment /

5 மொழிகளில் டப்பிங் பேசி அசத்திய நடிகர் விக்ரம் - பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட வீடியோ!

5 மொழிகளில் டப்பிங் பேசி அசத்திய நடிகர் விக்ரம் - பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட வீடியோ!

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம்

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்று புதினத்தை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன் படம் அமைக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
    பொன்னியின் செல்வன் படத்திற்காக நடிகர் விக்ரம் 5 மொழிகளில் டப்பிங் பேசி அசத்திய வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

    விக்ரம், ஐஷ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

    கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்று புதினத்தை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன் படம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நாவல் பிரமாண்ட காட்சிகளை மனதில் நிறுத்தும் என்பதாலும், படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர்களாலும் பொன்னியின் செல்வன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்டது.

    கடந்த வாரத்தில் படத்தில் இடம்பெற்றுள்ள விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய் ஆகியோரின் கதாப்பாத்திரங்களை படக்குழுவினர் வெளியிட்டனர். இவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

    Also read... வெளியானது கோப்ரா படத்திலிருந்து தராங்கினி பாடல் லிரிக்கல் வீடியோ

    இதனை தொடர்ந்து தமிழ் உள்பட 5 மொழிகளில் பொன்னியின் செல்வன் பட டீசர் வெளியிடப்பட்டது. முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்படவுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீசுடன் இணைந்து லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.



    இந்நிலையில் படத்தின் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள படக்குழு தற்போது விக்ரம் 5 மொழிகளில் டப்பிங் பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor Vikram, Entertainment

    அடுத்த செய்தி