முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Vikram: நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை... நலமாக உள்ளார் - மருத்துவமனை அறிக்கை

Vikram: நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை... நலமாக உள்ளார் - மருத்துவமனை அறிக்கை

விக்ரம்

விக்ரம்

Actor Vikram: அவருக்கு மாரடைப்பு இல்லை, அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை என மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும், தனது கடின உழைப்புக்காக பெயர் பெற்றவர். சினிமாவில் டப்பிங் கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய விக்ரம் இன்று லட்சக் கணக்கான ரசிகர்களை பெற்றிருக்கிறார். சேது, பிதாமகன், காசி, ஐ என படங்களின் கதாபாத்திரத்திற்காக அவர் எடுத்த ரிஸ்க், வேறு எந்த நடிகரும் நினைத்துக் கூட பார்க்க முடியாதது.

கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் உடலை வருத்தி நடிக்கவும் முடியும், கமர்ஷியல் படங்களில் மாஸ் ஹீரோவாக வெற்றி கொடியையும் நாட்ட முடியும் என நிரூபித்திருக்கிறார் விக்ரம். தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகியப் படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் கோப்ரா படத்தில் விக்ரம் 20 கெட்டப்புகளில் வருவதாக சொல்லப்படுகிறது. மறுபுறம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ளார் விக்ரம்.

விஜய் மக்கள் இயக்க செயல்பாடுகளில் சந்தேகத்தைக் கிளப்பிய எஸ்.ஏ.சந்திரசேகர்

இந்நிலையில் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இன்று மதியம் செய்திகள் வெளியாகின. இதனால் திரையுலகினரும் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்து, அவர்விரவில் குணமடைய வேண்டும் என இணையத்தில் பதிவிட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாக சைத்தன்யாவின் உருக்கமான பதிவு - இன்னும் சமந்தாவை மிஸ் செய்கிறாரோ என ரசிகர்கள் கேள்வி

இதற்கிடையே விக்ரம் சிகிச்சை பெற்று வரும் சென்னை காவேரி மருத்துவமனை தரப்பில் தற்போது அவருடைய உடல்நலம் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “மார்பில் அசெளகரியம் ஏற்பட்டு நடிகர் விக்ரம் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எங்கள் சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு மாரடைப்பு இல்லை, அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது. விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Actor Vikram