Home /News /entertainment /

விக்ரமின் 'மகான்' படத்துடைய கதை இதுதானா? எதிர்பார்ப்பை தூண்டும் ஓடிடி தளத்தின் பதிவு

விக்ரமின் 'மகான்' படத்துடைய கதை இதுதானா? எதிர்பார்ப்பை தூண்டும் ஓடிடி தளத்தின் பதிவு

மகான்

மகான்

மகான் படத்திற்காக துருவ் விக்ரம் தனது உடல் தோற்றத்தை மாற்றிக் கொண்டுள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து, கர்ணன் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார்.

    அப்பா விக்ரம், மகன் துருவ் நடிப்பில் உருவாகியுள்ள மகான் படத்தின் ரிலீஸ் தேதியை அமேசான் ஓடிடி தளம் அறிவித்துள்ளது. படத்தின் கதை குறித்த விபரங்களையும் அமேசான் தனது ஸ்டேட்மென்ட்டில் வெளியிட்டிருக்கிறது.

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயண் இசையமைத்துள்ளார். தாதா கேரக்டரில் துருவ் விக்ரம் நடித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

    விக்ரம், துருவுடன், வாணி போஜன், பாபி சிம்ஹா, சிம்ரன், சனந்த், தீபக் பரமேஷ் உள்ளிட்டோரும் இந்தப் படத்தி நடித்திருக்கிறார்கள். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ஜெகமே தந்திரம் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அந்தப் படமும் ஓடிடியில் வெளியான சூழலில், மகானும் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

    இதையும் படிங்க : அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகும் மகான் - தேதி அறிவிப்பு!

    மகான் படத்தின் கதை குறித்து அமேசான் ப்ரைம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மகான் கேரக்டரில் வரும் விக்ரம், தனது தனிப்பட்ட சுதந்திரம் காரணமாக குடும்பத்தை பிரிய நேரிடுகிறது. பின்னர் ஒரு கட்டத்தில் அவர் தனது லட்சியங்களை பின்தொடரும்போது, தன் மகன் இல்லாமல் போன வெறுமையை உணர்கிறார். பின்னர் எப்படி, கோடீஸ்வரன் ஆகுவது உள்ளிட்ட தனது லட்சியங்களை அடைந்தார், மகனுடன் இணைந்தாரா என்பதைப் பற்றி அமைந்ததுதான் மகான் திரைப்படம். வாழ்க்கையில் ஒருவருக்கு எதிர்பார்க்காத சம்பவங்கள் நடக்கும்போது, அதற்கு எப்படி ரி ஆக்ட் செய்கிறார் என்பதை அதிரடி சண்டைக் காட்சிகளுடன், மிகுந்த பரபரப்புடன் சொல்கிறது இந்த மகான்' என்று கூறப்பட்டுள்ளது.



     

    தந்தையைப் போலவே மகன் துருவ் விக்ரமும் மக்கள் மனதில் இடம்பெற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பாலா இயக்கத்தில் விக்ரம் தயாரிப்பில் எடுக்கப்பட்ட அர்ஜுன் ரெட்டி ரீமேக் ஆதித்ய வர்மா திரைப்படம் சரியாக அமையாத நிலையில், அந்த படத்தை படக்குழு டிராப் செய்தது. இதையடுத்து வர்மா என்ற பெயரில் மீண்டும் எடுக்கப்பட்ட திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது.


    மகான் படத்திற்காக துருவ் விக்ரம் தனது உடல் தோற்றத்தை மாற்றிக் கொண்டுள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து, கர்ணன் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார்.

    விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தில் 7 கேரக்டரில் விக்ரம் நடித்திருப்பதாக கூறப்படுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

    இதேபோன்று மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் கேரக்டரில் விக்ரம் நடித்துள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vikram

    அடுத்த செய்தி