Chiyaan 60: விக்ரம் - துருவ் விக்ரமின் ‘சியான் 60’ சூப்பர் அப்டேட்!

Chiyaan 60: விக்ரம் - துருவ் விக்ரமின் ‘சியான் 60’ சூப்பர் அப்டேட்!

துருவ் - விக்ரம்

சியான் விக்ரம் நடிக்கும் 60-வது படத்தை கார்த்திக் சுப்பாராஜ் இயக்கி வருகிறார். ஆக்ஷன் த்ரில்லராக இப்படம் தயாராகிறது.

  • Share this:
    சியான் விக்ரம் நடிக்கும் 60-வது படத்தை கார்த்திக் சுப்பாராஜ் இயக்கி வருகிறார். ஆக்ஷன் த்ரில்லராக இப்படம் தயாராகிறது.

    அப்பா முன்னணி நடிகராக இருந்தால் அவரது மகனையும் நடிக்கராக்காமல் இயக்குநர்கள் ஓய மாட்டார்கள். அப்படித்தான் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக்கை கடலில் அறிமுகப்படுத்தினார் மணிரத்னம். அதற்கு அடுத்தக்கட்டம், அப்பா, மகனை ஒரே படத்தில் நடிக்க வைப்பது. சந்திரமௌலியில் கார்த்திக், கௌதம் கார்த்திக் இணைந்து நடித்தனர். தெலுங்கில் அப்பா சிரஞ்சீவியும், மகன் ராம் சரணும் ஆச்சார்யா படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

    நாம் விக்ரமுக்கு வருவோம். மகன் துருவ் விக்ரமை தெலுங்கு அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கில் அறிமுகப்படுத்தினார் விக்ரம். தற்போது அப்பா, மகன் இருவரும் கார்த்திக் சுப்பராஜின் படத்தில் நடித்து வருகின்றனர். இன்னும் படத்துக்கு பெயரிடப்படவில்லை. சீயான் 60 என தற்காலிகமாக இப்படம் அழைக்கப்படுகிறது.

    7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பதாக இருந்தது. இப்போது அவரை நீக்கிவிட்டு சந்தோஷ் நாராயணனை ஒப்பந்தம் செய்துள்ளனர். விக்ரம், துருவ் விக்ரமுடன் சிம்ரன், பாபி சிம்ஹா, வாணி போஜன் ஆகியோரும் நடிக்கின்றனர். தற்போது இதன் படப்பிடிப்பு சென்னை பிரார்த்தனா டிரைவ் இன் திரையரங்கு வளாகத்தில் நடந்து வருகிறது. 22 நாள்களைக் கொண்ட இந்த நீண்ட ஷெட்யூல்டை முடித்த பின், படக்குழு கோவா செல்கிறது. அங்கு படத்தின் முக்கியமான காட்சிகளை படமாக்குகின்றனர். பிரதானமாக சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட உள்ளது.

    அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் கோப்ரா வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. கௌதம் மேனன் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் துருவ நட்சத்திரமும் இந்த வருடம் திரைக்குவர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: