முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கர்ணன் பார்த்துவிட்டு இயக்குநர் வீட்டுக்கு சென்று பாராட்டிய விக்ரம்

கர்ணன் பார்த்துவிட்டு இயக்குநர் வீட்டுக்கு சென்று பாராட்டிய விக்ரம்

விக்ரம் உடன் மாரி செல்வராஜ்

விக்ரம் உடன் மாரி செல்வராஜ்

கர்ணன் திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் மாரி செல்வராஜை வீடு தேடி சென்று பாராட்டியுள்ளார் நடிகர் விக்ரம்

  • Last Updated :

மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இதில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தாணு தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ஏப்ரல் 9-ம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஏப்ரல் 10-ம் தேதியிலிருந்து திரையரங்கில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும் கர்ணன் படம் வசூல் மழை பொழிந்து வருகிறது. ஒருபக்கம் வசூல் ரீதியாக வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. விஜய் சேதுபதி, பா.ரஞ்சித் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலரும் படத்தைப் பாராட்டி வரும் நிலையில் நடிகர் விக்ரம் இயக்குநர் மாரி செல்வராஜின் வீடு தேடிச் சென்று வாழ்த்தியுள்ளார்.

‘கர்ணன்’ படத்தை அடுத்து துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார் மாரி செல்வராஜ். இத்திரைப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முதல் இரண்டு படங்களிலிருந்து வித்தியாசப்படும் விதமாக கபடி வீரர் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி மாரி செல்வராஜ் தனது மூன்றாவது படத்தின் கதையை அமைத்துள்ளதாகவும் துருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

துருவ் விக்ரம் தனது தந்தையுடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘சியான் 60’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் துருவ்வுக்கு ஜோடியாக வாணி போஜனும் விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரனும் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தததும் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் துருவ் விக்ரம்.

First published:

Tags: Actor Vikram, Kollywood, Mari selvaraj