முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / உடல் நலம் குணமடைந்து வீடு திரும்பினார் நடிகர் விக்ரம்… ரசிகர்கள் மகிழ்ச்சி

உடல் நலம் குணமடைந்து வீடு திரும்பினார் நடிகர் விக்ரம்… ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம்

Actor Vikram Health : விக்ரமின் உடல்நிலை குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் நேற்று பரவின. இதற்கு மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்திருந்தது.

  • 1-MIN READ
  • Last Updated :

நெஞ்சு பகுதியில் ஏற்பட்ட அசவுகர்யத்தால் 2 நாட்களாக ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விக்ரம் குணமடைந்து வீடு திரும்பினார். இந்த தகவலையறிந்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும், தனது கடின உழைப்புக்காக பெயர் பெற்றவர். சினிமாவில் டப்பிங் கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய விக்ரம் இன்று லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றிருக்கிறார்.

சேது, பிதாமகன், காசி, ஐ என படங்களின் கதாபாத்திரத்திற்காக அவர் எடுத்த ரிஸ்க், வேறு எந்த நடிகரும் நினைத்துக் கூட பார்க்க முடியாதது.

இதையும் படிங்க - விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை - மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கை 

கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் உடலை வருத்தி நடிக்கவும் முடியும், கமர்ஷியல் படங்களில் மாஸ் ஹீரோவாக வெற்றி கொடியையும் நாட்ட முடியும் என நிரூபித்திருக்கிறார் விக்ரம்.

தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகியப் படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் கோப்ரா படத்தில் விக்ரம் 20 கெட்டப்புகளில் வருவதாக சொல்லப்படுகிறது. மறுபுறம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ளார் விக்ரம்.

விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நேற்று மதியம் செய்திகள் வெளியாகின. இதனால் திரையுலகினரும் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்து, அவர் விரைவில் குணமடைய வேண்டும் என இணையத்தில் பதிவிட்டனர்.

vikram : கோப்ரா பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறார் நடிகர் விக்ரம்!

இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்த ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனை நிர்வாகம்,  “மார்பில் அசெளகரியம் ஏற்பட்டு நடிகர் விக்ரம் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எங்கள் சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு மாரடைப்பு இல்லை, அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது. விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்”  என்று கூறியிருந்தது.

இந்த நிலையில், உடல்நலம் குணம் அடைந்து நடிகர் விக்ரம் வீடு திரும்பியுள்ளார். இந்த தகவலையறிந்து அவரது ரசிகர்களும், நலன் விரும்பிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

First published:

Tags: Actor Vikram