ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

"32 வருஷம்.. சினிமா மட்டும்தான் எனக்கு உசுரு.." மாஸ் வீடியோ வெளியிட்ட விக்ரம்!

"32 வருஷம்.. சினிமா மட்டும்தான் எனக்கு உசுரு.." மாஸ் வீடியோ வெளியிட்ட விக்ரம்!

என் காதல் கண்மணி - பொனனியின் செல்வன் படங்களில் விக்ரம்

என் காதல் கண்மணி - பொனனியின் செல்வன் படங்களில் விக்ரம்

விக்ரம் நடித்த முதல் படமான என் காதல் கண்மணி வெளியாகி இன்றுடன் 32 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    நடிகர் விக்ரம் சினிமாவுக்கு வந்து, இன்றுடன் 32 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில், மாஸ் வீடியோ ஒன்றை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    1990- இல் வெளியான ‘என் காதல் கண்மணி’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகர் விக்ரம் அறிமுகமானார். இந்த படத்திற்கு பின்னர் தமிழ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு குறைவாகவே வந்தநிலையில், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் சில ஆண்டுகளாக விக்ரம் நடித்து வந்தார்.

    1997-இல் அஜித்துடன் இணைந்து அவர் நடித்த உல்லாசம் திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பின்னர் 1999-ல் பாலா இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் சேது படம் வெளியாகி விக்ரமின் சினிமா வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்த படத்தில் சியான் என்ற கேரக்டரில் விக்ரம் நடித்திருப்பார். அந்தப்பெயர் தற்போது வரை அவருக்கு அடைமொழியாக வழங்கப்பட்டு வருகிறது.

    வெளிநாடுகளை அழகா காட்டியிருக்கீங்க - அதர்வா படத்துக்கு கிடைத்த விருது!

    சேதுவுக்கு பின்னர் தில், காசி, ஜெமினி, தூள், சாமி, பிதாமகன், அந்நியன், பீமா கந்தசாமி, தெய்வத்திருமகள், தாண்டவம், இருமுகன், மகான், கோப்ரா என அடுத்தடுத்து வெற்றி படங்களை விக்ரம் கொடுத்து வந்தார். இந்நிலையில் அவரது நடிப்பில் வெளிவந்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பதிவு செய்து வருகிறது.

    இந்தப்படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம் நடித்துள்ளார். அடுத்து வரவுள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் விக்ரம் இடம் பெற்றிருக்கிறார்.

    இந்நிலையில் அவர் நடித்த முதல் படமான என் காதல் கண்மணி வெளியாகி இன்றுடன் 32 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதையொட்டி வீடியோ ஒன்றை விக்ரம் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    தீப்பிடிக்கும் திரைக்கதை.. வசனம்.. அசரடித்த சிவாஜி! இன்று பார்த்தாலும் பட்டையைக் கிளப்பும் பராசக்தி!

    விக்ரம் அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது. இதற்கிடையே கிடப்பில் போடப்பட்டுள்ள கௌதம் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் திரைப்படம் இன்னும் சில மாதங்களில் திரைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vikram