ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

குடிக்கிறது கெட்ட பழக்கம், ஆனா நான் குடிப்பேன் - வைரலான விஜய்சேதுபதி பேச்சு!

குடிக்கிறது கெட்ட பழக்கம், ஆனா நான் குடிப்பேன் - வைரலான விஜய்சேதுபதி பேச்சு!

விஜய்சேதுபதி

விஜய்சேதுபதி

சோஷியல் மீடியாவில் சண்டை போடுவதை விட்டு விட்டு ஆக்கப்பூர்வமாக உங்கள் நேரத்தை செலவிடுங்கள் என தெரிவித்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras] | Chennai | Tamil Nadu

  கல்லூரி மாணவர்களிடையே பேசிகொண்டிருந்த நடிகர் விஜய்சேதுபதி, மாணவர்கள் தல என கத்தியதால் டென்ஷன் ஆனார்.

  சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய்சேதுபதி, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பேசினார். அப்போது, மாணவர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது என தெரிவித்த அவர், தனக்கும் மதுப்பழக்கம் உண்டு. ஆனால், அது நல்லது அல்ல ; உடல் நலத்திற்கு மிகவும் தீங்கானது. மாணவர்கள் யாரும் அதனை முயற்சித்து அதில் மூழ்கிப் போக வேண்டாம். எனக்கும் இப்படி நிறைய பேர் நல்லது சொன்னாங்க, நான் எதையும் கேட்கல, இப்போ வருந்துகிறேன். நீங்களாவது கேளுங்க என தெரிவித்தார்.

  தொடர்ந்து பேசிய அவர், சோஷியல் மீடியாவில் சுதந்திரம் கொடுப்பதுபோல கொடுத்து உங்களை எல்லாம் அதில் வரவழைத்து உங்களது நேரத்தையும் காலத்தையும் அது திருடுகிறது. நீங்கள் அனைவரும் அதை பயன்படுத்த ஆரம்பித்த நிலையில், அது உங்களை வைத்து தனது வியாபாரத்தை ஜோராக நடத்தி வருகிறது. இதனால் சோஷியல் மீடியாவில் சண்டை போடுவதை விட்டு விட்டு ஆக்கப்பூர்வமாக உங்கள் நேரத்தை செலவிடுங்கள் என தெரிவித்தார்.

  ALSO READ | தேசிய விருது பெற்ற கையோடு, தனது குரல் வளத்தை காட்டிய நஞ்சியம்மா

  மேலும், திருக்குறளை மேற்கோள் காட்டி பேசி கொண்டிருந்தபோது திடீரென மாணவர்கள் தல தல என கத்தி கூச்சலிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த விஜய்சேதுபதி, மேடையிலேயே இப்போ நான் என்ன பேசிட்டு இருக்கேன் நீங்க ஏன் தலன்னு கத்திட்டு இருக்கீங்க என கேட்டு கடுப்பானார்.

  பிறகு சிறிது நேரம் கழித்து உரையை தொடர்ந்த அவர், தலை தான் உடம்புக்கு முக்கியமான பாகம். அதனால், தான் திருவள்ளுவர் அப்படி சொல்லி இருக்கிறார் என பேசி விட்டு தனது உரையை முடித்துக் கொண்டு அங்கே இருந்து கிளம்பினார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Actor Vijay Sethupathi